HomeUncategorizedThirukural 364 of 1330 - திருக்குறள் 364 of 1330

Thirukural 364 of 1330 – திருக்குறள் 364 of 1330

Thirukural
364 of 1330 –
திருக்குறள் 364 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
துறவறவியல். அதிகாரம் :
அவாவறுத்தல்.
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.
Translation:
Desire’s decease as purity men know;
That, too, from yearning search for truth
will grow.
Explanation:
Purity (of mind) consists in freedom from
desire; and that (freedom from desire) is the fruit of the love of truth.
கலைஞர் உரை:
தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும். அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்.

 [ads-post]
மு. உரை:
தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
மணக்குடவர் உரை:
ஒருவர்க்கு அழுக்கறுத்தலாவது ஆசையின்மை; அவ்வாசை யின்மை மெய் சொல்லுதலை விரும்ப வரும். இது பொருள்மேலாசையில்லாதார் பொய் கூறாராதலின் மெய் சொல்ல அவாவின்மை வரும் என்று அவாவறுத்தற்குக் கருவி கூறிற்று.
பரிமேலழகர் உரை:
தூஉய்மை என்பது அவா இன்மைஒருவர்க்கு வீடு என்று சொல்லப்படுவது அவா இல்லாமை,அது வாஅய்மை வேண்ட வரும்அவ்வவா இல்லாமைதான் மெய்ம்மையை வேண்டத் தானே உண்டாம். (வீடாவது: உயிர் அவிச்சை முதலிய மாசு நீங்குதல் ஆகலின்,அதனைத்தூய்மைஎன்றும், காரணத்தைக் காரியமாக உபசரித்து, ‘தூய்மைஎன்பது அவா இன்மை என்றும் மெய்ம்மையுடைய பரத்தை ஆகுபெயரால்மெய்ம்மைஎன்றும் கூறினார். ‘மற்றுமேலையது போல வினைமாற்றின்கண் வந்தது. வேண்டுதல்இடைவிடாது பாவித்தல். அவா அறுத்தல், வீட்டிற்குப் பரம்பரையான் அன்றி நேரே ஏது என்பதூஉம் அது வரும் வழியும் இதனால் கூறப்பட்டன.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments