HomeUncategorizedThirukural 365 of 1330 - திருக்குறள் 365 of 1330

Thirukural 365 of 1330 – திருக்குறள் 365 of 1330

Thirukural
365 of 1330 –
திருக்குறள் 365 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
துறவறவியல். அதிகாரம் :
அவாவறுத்தல்.
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.
Translation:
Men freed from bonds of strong desire are
free;
None other share such perfect liberty.
Explanation:
They are said to be free (from future
birth) who are freed from desire; all others (who, whatever else they may be
free from, are not freed from desire) are not thus free.
கலைஞர் உரை:
ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.

 [ads-post]
மு. உரை:
பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.
சாலமன் பாப்பையா உரை:
ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.
மணக்குடவர் உரை:
பற்றற்றவரென்பார் ஆசையற்றவரே; ஆசையறாதவர் பற்றினையறுத்தாராயினும் ஆசையற்றாரைப் போலப் பற்றறுதலிலர்.
பரிமேலழகர் உரை:
அற்றவர் என்பார் அவா அற்றார்பிறவியற்றவர் என்று சொல்லப்படுவார் அதற்கு நேரே ஏதுவாகிய அவா அற்றவர்கள், மற்றையார் அற்றாக அற்றது இலர்பிற ஏதுக்களற்று அஃது ஒன்றும் அறாதவர்கள், அவற்றால் சில துன்பங்கள் அற்றதல்லது அவர்போற் பிறவி அற்றிலர். (இதனால் அவா அறுத்தாரது சிறப்பு விதிமுகத்தானும் எதிர்மறைமுகத்தானும் கூறப்பட்டது.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments