குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : இறைமாட்சி.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.
Translation:
Who
guards the realm and justice strict maintains,
guards the realm and justice strict maintains,
That
king as god o’er subject people reigns.
king as god o’er subject people reigns.
Explanation:
That
king, will be esteemed a God among men, who performs his own duties, and
protects (his subjects).
king, will be esteemed a God among men, who performs his own duties, and
protects (his subjects).
கலைஞர் உரை:
நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.
[ads-post]
மு.வ உரை:
நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.
மணக்குடவர் உரை:
குற்றஞ் செய்தாரை அதற்குச்
செய்யும் முறைமை தப்பாமற் செய்து, எல்லாவுயிரையுங் காத்தலைச் செய்கின்ற அரசன் மனிதர்க்கு
நாயகனென்று எண்ணப்படுவான்.
செய்யும் முறைமை தப்பாமற் செய்து, எல்லாவுயிரையுங் காத்தலைச் செய்கின்ற அரசன் மனிதர்க்கு
நாயகனென்று எண்ணப்படுவான்.
பரிமேலழகர் உரை:
முறை செய்து காப்பாற்றும் மன்னவன்
– தான் முறை செய்து பிறர் நலியாமற் காத்தலையும் செய்யும் அரசன், மக்கட்கு இறை
என்று வைக்கப்படும் – பிறப்பான் மகனேயாயினும், செயலான் மக்கட்குக் கடவுள் என்று வேறு வைக்கப்படும்.
(முறை: அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறி. ‘பிறர்‘ என்றது மேற்சொல்லியாரை. வேறு வைத்தல்: மக்களிற்
பிரித்து உயர்த்து வைத்தல்.)