HomeUncategorizedThirukural 654 of 1330 - திருக்குறள் 654 of 1330

Thirukural 654 of 1330 – திருக்குறள் 654 of 1330

Thirukural
654 of 1330 –
திருக்குறள் 654 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்தூய்மை.
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
Translation:
Though troubles press, no shameful deed
they do,
Whose eyes the ever-during vision view.
Explanation:
Those who have infallible judgement though
threatened with peril will not do acts which have brought disgrace (on former
ministers).
கலைஞர் உரை:
தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.

[ads-post]
மு. உரை:
அசைவற்ற தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்)
இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.
மணக்குடவர் உரை:
துன்பம் வரினும் இழிவாகிய
வினைகளைச் செய்யார் துளக்க மற்ற தெளிவுடையார்
. இது பிறரால் இகழப்படுவன செய்யற்க வென்றது. இதனையும் கடிய
வேண்டு மென்பது கூறப்பட்டது
.
பரிமேலழகர் உரை:
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்தாம் இடுக்கணிலே
படவரினும்
, அது
தீர்தற்பொருட்டு முன் செய்தார்க்கு இளிவந்த வினைகளைச் செய்யார்
; நடுக்கு அற்ற
காட்சியவர்
துளக்கம்
அற்ற தெளிவினை உடையார்
. (சிறிதுபோழ்தில்
கழிவதாய இடுக்கண் நோக்கி
,
எஞ்ஞான்றும் கழியாத இளிவு எய்தற்பாலது அன்று என்பதூஉம், அஃது எய்தினாலும்
வருவது வரும் என்பதூஉம் தெளிவர் ஆகலான்
, ‘செய்யார்என்றார்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments