HomeUncategorizedThirukural 656 of 1330 - திருக்குறள் 656 of 1330

Thirukural 656 of 1330 – திருக்குறள் 656 of 1330

Thirukural
656 of 1330 –
திருக்குறள் 656 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்தூய்மை.
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.
Translation:
Though her that bore thee hung’ring thou
behold, no deed
Do thou, that men of perfect soul have
crime decreed.
Explanation:
Though a minister may see his mother
starve; let him do not act which the wise would (treat with contempt).
கலைஞர் உரை:
பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது.

[ads-post]
மு.வ உரை:
பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.
மணக்குடவர் உரை:
தன்னைப் பயந்தாள் பசிகண்டானாயினும்
சான்றோரால் பழிக்கப்படும் வினையைச் செய்யாதொழிக
. இது நல்லோர் பழிக்கும் வினையைத் தவிர்க
என்றது
.
பரிமேலழகர் உரை:
ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் – தன்னைப்
பயந்தாளது பசியை வறுமையால் கண்டு இரங்கும் தன்மையினான் எனினும்
; சான்றோர்
பழிக்கும் வினை செய்யற்க

–
அது சுட்டி அறிவுடையார் பழிக்கும் வினைகளை ஒருவன் செய்யாதொழிக. (‘இறந்த மூப்பினராய
இருமுதுகுரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண் தீயன
பலவுஞ் செய்தாயினும் புறந்தருக
‘ என்னும் அறநூற்பொது விதி, பொருள்நூல் வழி ஒழுகுதலும், அரசர் தொழிற்கு
உரியராதலும்
, நன்கு
மதிக்கற்பாடும் உடைய அமைச்சர்க்கு எய்தாமை பற்றி
, இவ்வாறு கூறினார். இவை ஐந்து
பாட்டானும்
, ‘பாவமும்
பழியும் பயக்கும் வினை செய்யற்க
‘ என்பது கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments