HomeUncategorizedThirukural 655 of 1330 - திருக்குறள் 655 of 1330

Thirukural 655 of 1330 – திருக்குறள் 655 of 1330

Thirukural
655 of 1330 –
திருக்குறள் 655 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்தூய்மை.
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.
Translation:
Do nought that soul repenting must deplore,
If thou hast sinned, ’tis well if thou dost
sin no more.
Explanation:
Let a minister never do acts of which he
would have to grieve saying, “what is this I have done”; (but) should
he do (them), it were good that he grieved not.
கலைஞர் உரை:
என்ன தவறு செய்துவிட்டோம் என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது. ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று.

[ads-post]
மு. உரை:
பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.
சாலமன் பாப்பையா உரை:
என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தும் படியான செயல்களைச் செய்யாது விடுக; ஒருவேளை தவறாகச் செய்துவிட்டால், திரும்பவும் அதைச் செய்யாது இருப்பது நல்லது.
மணக்குடவர் உரை:
துணியப்பட்ட தென்று
பின்னிரங்கப்படும் வினையைச் செய்யா தொழிக
; வினைசெய்வானாயின் அவை போல்வனவுஞ் செய்யாமையே நல்லது. இது
பின்னிரங்கப்படும் வினையைச் செய்யலாகாதென்றது
.
பரிமேலழகர் உரை:
எற்று என்று இரங்குவ செய்யற்கயான் செய்தது
எத்தன்மைத்து என்று பின் தானே இரங்கும் வினைகளை ஒருகாலும் செய்யாதொழிக
; செய்வானேல் மற்று
அன்ன செய்யாமை நன்று
அன்றி
ஒருகால் மயங்கி அவற்றைச் செய்யும் தன்மையனாயினான் ஆயின்
, பின் இருந்து
அவ்விரங்கல்களைச் செய்யாதொழிதல் நன்று
. (‘இரங்குவஎன முன் வந்தமையின், பின்அன்னவெனச் சுட்டி ஒழிந்தார். அவ்வினைகளது பன்மையான் இரக்கமும் பலவாயின. அச்செயற்குப்
பின்னிருந்து இரங்குவனாயின்
,
அது தீரும் வாயில் அறிந்திலன் எனவும், திட்பமிலன் எனவும் பயனல்லன செய்கின்றான் எனவும்,தன்பழியைத் தானே
தூற்றுகின்றான் எனவும் எல்லாரும் இகழ்தலின்
, ‘பின் இரங்காமை நன்றுஎன்றார்.இதுவும் வினைத்தூயார் செயலாகலின்,உடன் கூறப்பட்டது. ‘பின்
தொடர்தற்குச் செய்வானாயின்
,
அவை போல்வனவும் செய்யாமை நன்றுஎனப் பிறரெல்லாம் இயைபு அற உரைத்தார்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments