HomeUncategorizedThirukural 690 of 1330 - திருக்குறள் 690 of 1330

Thirukural 690 of 1330 – திருக்குறள் 690 of 1330

Thirukural
690 of 1330 –
திருக்குறள் 690 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : தூது.
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.
Translation:
Death to the faithful one his embassy may
bring;
To envoy gains assured advantage for his
king.

Explanation:
He is the ambassador who fearlessly seeks
his sovereign’s good though it should cost him his life (to deliver his
message).
கலைஞர் உரை:
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்.

[ads-post]
மு. உரை:
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.
சாலமன் பாப்பையா உரை:
தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தியை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.
மணக்குடவர் உரை:
தனக்கு இறுதி வருமாயினும், ஒழியாது
தன்னிறைவற்கு நன்மையைத் தருவது தூதாவது
.
பரிமேலழகர் உரை:
இறுதி பயப்பினும் எஞ்சாதுஅவ்வார்த்தை தன்
உயிர்க்கு இறுதி தருமாயினும் அதற்கு அஞ்சியொழியாது
; இறைவற்கு உறுதி பயப்பது தூதாம்தன் அரசன்
சொல்லியவாறே அவனுக்கு மிகுதியை வேற்றரசரிடைச் சொல்லுவானே தூதனாவான்
. (‘இறுதி பயப்பினும்என்றதனால், ஏனைய பயத்தல்
சொல்ல வேண்டாவாயிற்று
. இவை
மூன்று பாட்டானும் கூறியது கூறுவானது இலக்கணம் கூறப்பட்டது
.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments