HomeUncategorizedThirukural 691 of 1330 - திருக்குறள் 691 of 1330

Thirukural 691 of 1330 – திருக்குறள் 691 of 1330

Thirukural
691 of 1330 –
திருக்குறள் 691 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : மன்னரைச் சேர்ந்தொழுதல்.
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
Translation:
Who warm them at the fire draw not too
near, nor keep too much aloof;
Thus let them act who dwell beneath of
warlike kings the palace-roof.
Explanation:
Ministers who serve under fickle-minded
monarchs should, like those who warm themselves at the fire, be neither (too)
far, nor (too) near.
கலைஞர் உரை:
முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள்.

[ads-post]
மு. உரை:
அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலை நின்று பழகுக.
மணக்குடவர் உரை:
மாறுபாடுடைய வேந்தரைச்
சேர்ந்தொழுகும் அமைச்சர் அவரை அகலுவதுஞ் செய்யாது அணுகுவதுஞ் செய்யாது
தீக்காய்வார்போல இருக்க
. இது
சேர்ந்தொழுகுந் திறங்கூறிற்று
.
பரிமேலழகர் உரை:
இகல் வேந்தர்ச் சோந்து ஒழுகுவார்மாறுபடுதலையுடைய
அரசரைச் சோந்தொழுகும் அமைச்சர்
; அகலாது அணுகாது தீக்காய்வார் போல்கஅவரை மிக நீங்குவதும்
மிகச் செறிவதும் செய்யாது தீக்காய்வார் போல இடை நிலத்திலே நிற்க
. (கடிதின் வெகுளும்
தன்மையர் என்பது தோன்ற
, ‘இகல்வேந்தர்என்றார், மிக அகலின் பயன்
கொடாது
, மிகஅணுகின்
அவமதிபற்றித் தெறும் வேந்தர்க்கு
, மிக அகலின் குளிர் நீங்காது மிக அணுகின் சுடுவதாய தீயோடு
உளதாய தொழில் உவமம் பெறப்பட்டது
.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments