HomeUncategorizedThirukural 693 of 1330 - திருக்குறள் 693 of 1330

Thirukural 693 of 1330 – திருக்குறள் 693 of 1330

Thirukural
693 of 1330 –
திருக்குறள் 693 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : மன்னரைச் சேர்ந்தொழுதல்.
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.
Translation:
Who would walk warily, let him of greater
faults beware;
To clear suspicions once aroused is an
achievement rare.
Explanation:
Ministers who would save themselves should
avoid (the commission of) serious errors for if the king’s suspicion is once
roused, no one can remove it.
கலைஞர் உரை:
தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள். பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும். அப்படி செய்துவிட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல.

[ads-post]
மு. உரை:
(அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் அரியத் தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும், ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காக்கக் கருதினால் மோசமான பிழைகள் தம் பங்கில் நேர்ந்து விடாமல் காக்க; பிழைகள் நேர்ந்துவிட்டதாக ஆட்சியாளர் சந்தேகப் பட்டுவிட்டால் அவரைத் தெளிவிப்பது எவர்க்கும் கடினம்.
மணக்குடவர் உரை:
காப்பின், காத்தற்கு
அரியனவற்றைக் காப்பாற்றுக
:
ஐயப்பட்ட பின்பு தெளிவித்தல் யாவர்க்கும் அரிது. இஃது அடுத்தொன்று சொல்லாம
லொழுகவேண்டும்மென்றது
.
பரிமேலழகர் உரை:
போற்றின் அரியவை போற்றல்அமைச்சர் தம்மைக்
காக்கக் கருதின் அரிய பிழைகள் தங்கண் வாராமல் காக்க
; கடுத்த பின் தேற்றுதல் யார்க்கும் அரிதுஅவற்றை
வந்தனவாகக் கேட்டு அவ்வரசர் ஐயுற்றால் அவரைப் பின் தெளிவித்தல் யாவர்க்கும் அரிது
ஆகலான்
. (அரிய
பிழைகளாவன
: அவரால்
பொறுத்தற்கு அரிய அறைபோதல்
,
உரிமையொடு மருவல், அரும்பொருள்
வௌவல் என்றிவை முதலாயின
. அவற்றைக்
காத்தலாவது
, ஒருவன்
சொல்லியக்கால் தகுமோ என்று ஐயுறாது தகாது என்றே அவர் துணிய ஒழுகல்
. ஒருவாற்றான்
தெளிவித்தாலும் கடன்கொண்டான் தோன்றப் பொருள் தோன்றுமாறுபோலக் கண்டுழியெல்லாம் அவை
நினைக்கப்படுதலின் யார்க்கும் அரிதென்றார்
. இவை மூன்று பாட்டானும் அது பொதுவகையால் கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments