Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 10771 - 10800 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 10771 – 10800 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 10771 – 10800 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பண்டா கமப்படியே பசாசையெல் லாமெரிக்க
என்மனதி லுற்றேன் இங்கேவந்து வாய்த்ததென்று
நன்முனியே பேயை நகன்றிடாக் காருமென்றார்
முன்னேநீ பேய்க்கு முதல்யா மியங்கொடுத்து
இந்நேரங் கூட்டி என்னிடத்தில் கொண்டுவந்தாய்
வந்தது நல்லதுதான் வாய்த்தமுனி யேயிப்போ
இந்தாப் பேய்க்கணக்கை எடுத்துரைக்கேன் கேட்டிருநீ
பொல்லாக் கலியன் பிறந்தநா ளன்றுமுதல்
நல்லவைகுண்டம் நாட்டில் வரும் வரையும்
எல்லாம் பேய்களுக்கு ஈந்தவர மானதினால்
வல்லவரான வைகுண்டபெம்மானும்
நீசன் கொடுமை நீணிலமெல் லாம்பரந்து
தேசச் சிறப்புச் சிதறிக் குலைந்ததெல்லாம்
வாயநா ராயணரும் வைகுண்ட மாய்ப்பிறந்து
ஞாய நடுகேட்டு நாட்டுக்குற்றந் தீர்த்து
ஆகாத்த தெல்லாம் அழித்துநர கத்திலிட்டு
வாகாய் நரக வாசல் தனைப்பூட்டி
நல்லோர்க்கு நாலு வரங்கொடுத் தேயெழுப்பி
பொல்லாரை நரகில் போட்டுக் கதவடைத்து
வல்லோரைச் சொல்லொன்றுள் வைந்த ரரசாளப்
பிறந்துபூ மிதனிலே பேறாக வந்தவுடன்
இறந்ததுகாண் பேய்கள் இவர்க்காகாப் பேர்களெல்லாம்
என்று பேய்களுக்கு ஈந்துவரம் கொடுத்ததெல்லாம்
அன்று பேய்க்கணக்கு வாசித்தா ராதியுமே
இம்மணியி லித்திவசம் ஈந்தவர மல்லாது
எம்மணியு மிப்பேய்க்கு எள்ளளவு மில்லையென்றார்
உண்டோகாண் பேய்க்கு ஒருமணிதா னானாலும்
கண்டோ முனியே கணக்குண்டோ சொல்லுஇனி
கேட்டு முனியும் கெஞ்சிமிக வாய்புதைத்து
நாட்டுக் குடைய நாரா யணருரைத்தால்

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments