Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 1081 - 1110 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1081 – 1110 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1081 – 1110 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

வாரிய மூணு கோடி வரமது தோற்றுப் பின்னும்
மூரியன் மூணு லோகம் முழுதுமே யடக்கி யாண்டான்

இராவணன் கொடுமை

முக்கோடி வரத்தை உச்சிக்கொண்டார் மாயவரும்
அக்கரைக் கோடி அரக்கன்வரம் கொண்டேகித்
வாசுஅரக்கன் மணிமேடை தூராட்டால்
வீசுவேன் வாளால் வெட்டுவேன் பாருவென்பான்
வருணனவன் மேடைவந்து தெளியாதிருந்தால்
மரணம்வரும் வரையும் வல்விலங்கில் வைப்பேனென்பான்
சந்திரருஞ் சூரியருஞ் சாய்ந்துமிகப் போகாட்டால்
சந்துசந்தாக சரத்தாலறுப்பே னென்பான்
தெய்வ மடவார்கள் திருக்கவரி வீசாட்டால்
கைவரைந்து கெட்டிக் கடுவிலங்கில் வைப்பேனென்பான்
நாலுமறையும் நல்ல ஆறுசாஸ்திரமும்
பாலுக்குடஞ் சுமந்து பணிந்து முன்னில்லாவிட்டால்
அஸ்திரத்தால் வாந்து அம்மிதனில் வைத்துரைத்து
நெற்றிதனில் பொட்டிடுவேன் நிச்சயமென் பானரக்கன்
வானவர் களெல்லாம் மலரெடுத் தென்காலில்
தானமது பண்ணி தாழ்ந்து நில்லாதேயிருந்தால்
சாகும் வரைக்கும் தடியிரும்பி லிட்டவரை
வேகும் படிக்கு வேள்விதனிலிட் டிடுவேன்
மாமறலிமூவர் வந்தென் சொல்லை கேளாட்டால்
காமனையும் ஈசன் கண்ணாலெரித்ததுபோல்
என்னுடையக் கண்ணால் எமனையுங் காலனையும்
உன்னுடைய வல்ல தூதனையும் நானெரிப்பேன்
இவ்வுல கத்திலுள்ள ராசாதி ராசரெல்லாம்
மூவ்வுகமுங் கப்பமிங்கே முன்னாடித் தாராட்டால்
நெருப்பெடுத் திட்டிடுவேன் நேரேகொண்டு வாராட்டால்
எரிப்பேனோர் அம்பால் ராசாதி ராசரையும்
இப்படியே பாவி இந்திரலோகம் வரையும்
அப்படியே அரக்கன் அடக்கியர சாண்டிருந்தான்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments