Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 11011 - 11040 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 11011 – 11040 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 11011 – 11040 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

என்று மலையரசர் எல்லோருஞ் சம்மதித்து
அன்று வைப்போமென்று அடிபணிந்து தெண்டனிட்டு
ஐயாவே யெங்களுட ஆதிநா ராயணரே
கையார வைக்கக் கருவுகொண்டு வந்தோமில்லை
ஏடுகொண்டு வந்தோ மில்லையே யெம்பரனே
வீடுவரைப் போயெடுத்து விரைவாக வாறோம்நாம்
என்றுரைக்க மந்திரத்தோர் எம்பெருமா ளேதுரைப்பார்
நன்று அதுதூரம் நம்முடைய கைக்குள்ளொரு
சூட்ச முண்டு பிள்ளாய் சொல்லக்கேள் நீங்களெல்லாம்
மாச்சல் படவேண்டாம் மலையரசா நீங்களெல்லாம்
எல்லா விதத்தொழிலும் இந்திரமா ஞாலமுதல்
எல்லாம் வைத்தோமென்று ஆணையிட் டாற்போதும்
நல்லதுவே யென்று நாடி மலையரசர்
வல்ல விதத்தொழிலும் மந்திரமா ஞாலமுதல்
எல்லா மடக்கி இப்போது வைத்தோமென்றார்
அய்யாணை யிட்டு அவர்முன்னே வைத்தார்காண்
மெய்யாணை யிட்டப் பொழுதே மலையரசர்
எங்கள் பிழைப்பு இப்போதே போச்சுதையா
தங்கடங்க ளொன்று தானிருக்கு தையாவே
இதினால் பிழைப்பு என்றிருந்தோ மித்தனைநாள்
விதியால் குறைந்ததுகாண் வித்தை பிழைப்பெல்லாம்
மலையில் பயிரிட்டு வயிறு பிழைப்பதற்கு
உலைவில்லா நொம்பலமும் உலாவுமிரு கச்சிறையும்
இல்லாமலே விலக்கி இப்போ தரவேணும்
நல்லாப் பயிர்விளைந்து நாங்கள் பிழைக்கவேணும்
என்று இவர்கேட்க இதுதந்தோ மென்றுரைத்தார்
அன்று அவரனுப்பி அவர்மலைக் கேகுகையில்
வைத்த தொழிலை மலையரசா நீங்களெல்லாம்
செயித்த தறியாமல் திருப்பியே செய்ததுண்டால்
நரக மதுபிடித்து நாள்வழியே கொன்னுகொன்னு

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments