Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 2461 - 2490 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2461 – 2490 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2461 – 2490 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

திசைமாறித் திக்கில் திரிந்தலைந்து போயினரே
வேதா சிவனும் வெம்மருண்டு தாம்பதற
நாதாந்த மோதும் நன்மறையோர் தாம்பதற
துரியோ தனன்போரும் செயவீமன் றன்போரும்
எரியோ டெரிதான் எதிர்த்துப் பொருதாப்போல்
ஒண்ணுக்கு வொண்ணு ஒல்கிப்புறஞ் சாயாமல்
மண்ணும்விண் ணுமதிர மண்டி யுத்தமிட்டார்
துரியோ தனனடிக்கத் துடிவீமன் சாயாமல்
மரியாதை வீமன் மாறிய வனடிக்க
அடிக்க அவன்பிடிப்பான் அப்படியே சண்டையிட்டுச்
சாயா விதத்தைத் தானறிந் திருபேரும்
வாயால் சபதம் வகுத்தே பொருவோமென்று
கட்டான கள்ளன் கசடன் வெகுகெடும்பன்
துட்டாள னான துரியோதன னுரைப்பான்
இத்தனை நேரம் இருபேருஞ் சண்டையிட்டுப்
புத்தியில்லா வண்ணம் பொருதோமே வம்பாலே
உன்பெலமு முன்னுடைய உயிர்ப்பெலமும் நீயுரைத்தால்
என்பெலமு முன்னோடே இயம்புகிறே னென்றுரைத்தான்
அப்போது வீமன் அவனிலைக ளத்தனையும்
தப்பாமல் தானுரைத்தான் சகலோ ரறிந்திடவே
கேட்டுத்துரி யோதனனும் கேளுநீ யென்பெலங்கள்
தீட்டுகிறே னென்னிடது செய்யபுற மென்றுரைத்தான்
கள்ளக் கௌசலமாய்க் கபடுரைத்த ஞாயமெல்லாம்
எவ்வளவு போலே இசையாத வீமனுக்கு
மெய்யுரைத்தா னென்று மேலான போர்வீமன்
கையாரத் தண்டால் கனக்க அடித்தனனே
அடிக்கவே வீமன் அசையாமல் மற்றோனும்
திடத்த முடனே சென்றவ் வீமன்பேரில்
மாறி யவனிடிக்க வாட்டமுற்றுப் போர்வீமன்
தேறியே மாயவரைச் சிந்தை தனில்நினைக்கத்


விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments