Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 2641 - 2670 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2641 – 2670 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2641 – 2670 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

ஒருவனுக்கே யல்லால் ஊழியங்கள் வேறில்லையே
கேட்டுஸ்ரீ கிருஷ்ணரும் கிளிமொழியோ டேதுரைப்பார்
ஒட்டி லிரந்துண்ண ஊர்வழியே தான்திரியும்
ஆண்டிக்கே யல்லாது அரவணையி லேதுயிலும்
காண்டீபனுக் கேவல் கருதோ மெனவுரைத்தீர்
தோகையரே கங்கையினிச் சுருட்டுவ தைப்பார்ப்போம்
ஆகட்டு மென்று அச்சுதருங் கோபமுற்று
மேலோக மாயிருக்கும் வேதயேழு வுகத்தில்
சாலோக மான சத்திபர லோகமதில்
ஆருரூ மில்லாத ஆகாச சத்தியொன்றும்
சீருரூப மான சிவலோக மானதிலே
மெய்கொண்ட வானோர் வித்தொன்று ஆனதுவும்
வைகுண்ட லோகமதில் வாய்த்ததர்மி யானதிலே
தன்மியொரு வித்துத் தானெடுத்து வேதாவின்
சென்மித் தெடுத்தார் சிவயிருஷி யொன்றதிலே
தபோதனராய்ச் சண்டன் தன்னுகத்தில் வாழுவரில்
சகோதரரா யொன்று தானெடுத்தா ரம்மானை
சொர்க்கலோ கமதிலே ஸ்ரீராமர் தன்றனக்கு
பக்குவங்க ளாகப் பணிவிடைகள் செய்வோரில்
நல்லகுல மான நயனவித் தொன்றெடுத்து
வெல்லமர் கோன்வாழும் வெற்றிதெய்வ லோகமதில்
புத்தியுள்ள நாதன் பின்யுகத்தை யாளுதற்கு
சத்தியுள்ள வித்தொன்று தானெடுத்தா ரம்மானை
இப்படியே மேலோகம் ஏழு லோகமதிலும்
அப்படியே நல்ல ஆர்க்கமுள்ள வித்தேழு
எடுத்துத் திருமால் இருதயத்தி லேயடக்கிக்
கொடுத்துநின்ற தாதாவைக் குவித்துப் பதம்போற்றிக்
கன்னியுட கற்பதுக்குக் கருத்தேது செய்வோமென்று
உன்னி மனதில் ஒருமித்துப் பார்த்தனரே
பார்த்தனரே கற்பதுக்குப் பக்குவம்வே றில்லையென்று

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments