Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 3001 - 3030 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3001 – 3030 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3001 – 3030 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

உயிர்ச்சேதம் வராமல் ஒன்றுபோ லென்மகவை
நெய்ச்சீதம் போலே நீவளர்த்துத் தாவெனவே
அல்லாம லென்மகவை ஆரொருவ ரானாலும்
கொல்லாமல் காக்கக் கூடுமோ வுன்னாலே
அன்பான காளி அதற்கேது சொல்லலுற்றாள்
என்பாலகர் தனையும் ஈடுசெய்ய யிங்கொருவர்
உண்டோகா ணிந்த உலகி லெனக்கெதிரி
என்றேதான் காளி இப்படியே சொல்லியபின்
பாலரையுந் தானெடுத்துப் பரமசிவ னாரருளால்
கோலமுள்ள மாயன் கொடுத்தாரொரு வார்த்தைசொல்லி
சீலமுள்ள காளியென் சித்திரப் பாலருக்கு
பாலருக்குப் பங்கமது பற்றாமல் காத்திடுநீ
மதலைதனக் கோர்தீங்கு வந்ததே யுண்டானால்
குதலையரே வுன்றனக்குக் கொடுஞ்சிறைதான் சிக்குமென்று
சொல்லியே காளிகையில் சிறுவரையுந் தான்கொடுத்து
வல்ல பெலமுள்ள மாடுதனி லேறியையும்
வேதாவும் நல்லநெற்றி விழியுடை யாள்தனையும்
மாதாவு மான வாய்த்தசர சோதியையும்
தேவர்முதல் வானவரை சிட்டர்முனி வோர்களையும்
மூவர்களை யுங்கயிலை ஊரேபோ மென்றனுப்பி
காளிதனைப் பிள்ளைகளைக் கருத்தாய்வள நீயென்று
ஆழி யடைத்த அச்சுதருந் தான்நடந்து
சீரங்க மாபதியில் சென்றிருந்தா ரம்மானை
சாரங்கர் சீரங்கம் தான்வந்தா ரென்றுசொல்லி
சீரங்க மெல்லாம் செழித்து மிகவாழ்ந்து
பாரெங்கு மெச்சிப் பரந்துகா ணம்மானை
அப்படியே அச்சுதரும் அப்பதியி லங்கிருக்க
எப்படியும் சீரங்கம் இனிதழைக்கு மென்றுமிக
மூவர் முதலாய் முப்பத்து முக்கோடித்
தேவருங் கொண்டாடி சிந்தைமகிழ்ந் தேயிருந்தார்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments