Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 3031 - 3060 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3031 – 3060 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3031 – 3060 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

சீரங்க மான திருப்பதியின் வளமை
சாரங்க ராயர் தாமுரைத்தா ரம்மானை
மாரியது மூன்று வருசிக்கத் தான்பொழிந்து
ஏரி பெருகி ஏற்றசெந்நெல் தான்விளைந்து
படியொன்று கோட்டையொன்றாய்ப் பழுத்துவருஞ் செந்நெலது
கரும்பு முத்தீனும் கசுவுங் கரைபுரளும்
அரும்பு வனமும் அகில்தேக்கு மாமரமும்
கோவுஞ் ஸ்ரீரங்கரெனக் கூப்பிடுங்கா ணச்சுதரை
மாவுஞ் ஸ்ரீரங்கரென வந்தழைக்கு மச்சுதரை
மயில்குயில் மான்கலையும் வாய்த்தஅணில் பட்சிகளும்
ஒயிலாக அச்சுதரை உள்ளாக்கி யாடிவரும்
அவ்வூரி லுள்ள அந்தணர்க ளெல்லோரும்
கவ்வைவே றில்லாமல் கரியமால் தன்றனக்கு
பூசை முறைவைத்துப் பிராமணர்கள் செய்துவர
ஆசையுட னச்சுதரும் அங்கே யினிதிருந்தார்

சான்றோர் பெருமை

சீரங்க மாபதியில் சிறந்திருக்கு மப்போது
சாரங்கர் பெற்ற சான்றோர் களின்பெருமை
சொல்லுகிறா ரெங்கள் திருமால்கா ணம்மானை
நல்லதுகா ணென்று நாடித் திருகேட்க
அன்பான சான்றோர்க்கு ஆனமா காளியம்மை
தன்பாலர் போலே தான்வளர்ந்து வித்தைகளும்
வருத்திக் கொடுத்து மன்னர்மன்னர் தானாக்கி
கருத்திலுறக் காளி கண்ணான மக்களுக்கு
வேண்டும் பணிகளெல்லாம் விதவிதமாய்த் தானெடுத்துப்
பூண்டந்த மக்களையும் பூத்தான மாய்வளர்த்தாள்
மிக்கநல்ல பிள்ளை வீரரென ஆகுகையில்
தக்கனென்ற சூரன் தன்பேரில் மாகாளி
படைக்கு யெழுந்தருளிப் பாலரையுந் தான்கூட்டி
நடைக்கு அதிகமுள்ள நாயகியும் பாலருக்குப்
போர்க் கோலமிட்டுப் புட்டாபுரங் கடந்து

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments