Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 3211 - 3240 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3211 – 3240 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3211 – 3240 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மெய்த்துப்புவி கொண்டாட மெல்லியர்கள் தங்களுக்கு
வயிற்றில் கெற்பமாகி மதலைபெற்றா ரம்மானை
நெய்த்தெளிய கன்னி நேரிழைமா ரெல்லோரும்
இப்படியே கன்னி எல்லோரும் நன்றாக
அப்படியே மதலைபெற்று அகமகிழ்ந்தா ரம்மானை
பாலருக்குப் பாலர் பரிவாய் மிகவளர
சீலமுள்ள வித்தை சிறக்க அவர்வருத்தி
எமத்திறைவ ராக எங்கும் புகழ்ந்திடவே
சமர்த்த ரெனஅவர்கள் தலையெடுத்தா ரம்மானை
முத்து வியாபாரம் முதல்வியா பாரமுதல்
பத்தரை மாற்றுப் பசும்பொன்வியா பாரமுடன்
மாணிக்க வியாபாரம் வியிரப்பொன் வியாபாரம்
ஆணிப்பொன் வியாபாரம் அழகுகச்சை வியாபாரம்
கப்பல் வியாபாரம் கறிமிளகு வியாபாரம்
ஒப்பமுள்ள வியாபாரம் ஒக்கமிகச் செய்தனராம்
தாலம தேறித் தைரியப் பால்வாங்கி
மேலுள்ள சான்றோர் மிகுதியா யாண்டிருந்தார்
நெய்த்தொழிலும் வில்தொழிலும் நெறடுவிதத் தொழிலும்
மெய்த்தொழில்கள் கற்று மேலோ ரெனவளர்ந்தார்
சோழ னதையறிந்து தெய்வச்சான் றோர்களுக்கு
வேழம்பல கொடுத்து மிகுகற்பமுங் கொடுத்து
நல்லமன்ன ரென்று நாடி மகிழ்ந்திருந்தார்
செல்லமன்ன ரான தெய்வச்சான் றோர்களுக்கு
அடிக்கல் லெழுதி ஆயிரம் பொன்கொடுத்து
முடிக்கு முடிச்சோழன் முத்துமுடியுங் கொடுத்து
வீர விருதுகளும் வேழம் பரிகொடுத்து
பாரமுள்ள சீமைதனில் பங்கு மிகக்கொடுத்து
சோழன் முடியும் துலங்க மிகக்கொடுத்து
ஆழமுள்ள சான்றோர் அரசாண்டா ரம்மானை
சோழனுட னெதிர்த்துச் சோரவந்த மாற்றானை

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments