Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 5941 - 5970 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 5941 – 5970 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 5941 – 5970 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஆவலது கொண்டஇடம் அச்சுதரே சம்மதங்காண்
எந்தவித மாகிடினும் எனக்கந்தப் பெண்கொடியைத்
தொந்தமா யென்றனக்குத் தொலையாத ஆசையதும்
தந்தருளி வைத்தால் தர்மமுண் டுங்களுக்கு
என்றன் பிரானே இனிமாற்றிச் சொல்லவேண்டாம்
என்றுரைக்கத் தேவன் எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
ஒன்றுநீ கேட்டிலையே உன்மனது ஒத்திலையே
கீழுள்ள பெண்ணை மேலாக்க வேணுமென்றால்
வேழமொத்த தேவா மிகுத்ததவஞ் செய்திடுநீ
மேலாக வேணுமென்று மெல்லியரும் நற்றவசு
காலால் கனலெழுப்பிக் கடுந்தவசு செய்திடச்சொல்
தவசு இருபேரும் தாற்பரிய மாகநின்று
சிவசுவா சம்பெருக்கிச் சிறந்ததவஞ் செய்திடச்சொல்
நின்ற தவத்தில் நிலையாய் நினைத்ததெல்லாம்
அன்றுங் களுக்கு அருளுவே னானுமென்று
சொல்லிடவே தேவன் சிரித்து மனமகிழ்ந்து
நல்லதுதா னென்று நாட்டமுற்றுத் தேவனுந்தான்
பரதே வதையான பைங்கிளியைத் தான்கூட்டி
விரைவா கத்தேவன் விறுமா பதஞ்சேவித்து
நின்றான் தவசு நெடியோ னுறுதியென்று
நன்றான நன்னுதலும் நல்லசம் பூரணனும்
மனைவியும் புருசனென மாறாபடையுமென்று
நினைத்துத் தவசு நிற்கநிலை தேடிநின்றார்
அனைத்துயி ருங்காக்கும் அய்யாநா ராயணரும்
கனத்துடனே பின்னும் கட்டாக ஏதுசெய்தார்

எமலோகத்தார் மனுப்பிறப்பு

ஏம னுலகமதில் இருக்குந் தபோதனரைத்
தாமனந்தப் பேர்கள் சர்வது மேயழைத்து
வாருங்கோ பிள்ளாய் வாய்த்த தபோதனரே
ஏதுங்கள் ஞாயம் என்னோடே சொல்லுமென்றார்
உங்கள் குடும்பம் உடையோன் பதம்வணங்கி

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments