Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 9031 - 9060 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9031 – 9060 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9031 – 9060 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

குறைநோவு கொண்டு கூடிழப்பா னுன்காலம்
அதிலே சிலபேர் அரசுனக் கெனக்கெனவே
விதியை யறியாமல் வெட்டிக்கொண் டேமாள்வார்
அத்தருண முன்காலம் அதிகமக னேகேளு
இத்தருண மல்லால் இன்ன மெடுத்துரைப்பேன்
எல்லோருங் கைவிட்டு இருப்பாருனைத் தேடாமல்
நல்லோர் மனதில் நாரணா என்றுரைப்பார்
கோல விளையாட்டுக் கொஞ்ச மெடுப்பேனான்
தூல மறியாமல் தொல்புவியெல் லாமயங்கும்
அன்போர்க ளெல்லாம் ஆவியே தான்மறுகி
இன்ப முடனே ஏங்கியேங்கி யழுவார்
இத்தனை நாளும் இவரைநம்பி நாமிருந்து
புத்தியது கெட்டோம் என்றுமிகப் பேதலிப்பார்
அப்போது ஆகா அன்னீத மாபாவி
இப்போது கண்டுதென்பார் ஏலமே சொன்னதெல்லாம்
எய்த்தானென்பா னன்போரை இடுக்கஞ்செய் தேயடிப்பான்
சூட்ச முடனே சொரூபமொன்று நானெடுப்பேன்
அச்சூட்சம் என்மக்கள் அன்று அறிந்திடுவார்
அதுதா னொருகாலம் அதிகமக னேகேளு
இதுபெரிய சூட்சம் என்மகனே கேட்டிடுநீ
அதின்மேலே அன்போர் அதிகப் பெரியோராய்
இதின்மேலே தாண்டும் எல்லோரும் வல்லோரே
பின்னுமொரு சூட்சம் பிரமாண மாயெடுப்பேன்
பன்னு மணியே பராபரமே கேட்டிடுநீ
குளத்தைத் தடதடெனக் கொந்துகொந் தாயுடைத்து
சுழற்றக்கன லக்கினியும் துர்க்கைமா துர்க்கையையும்
விட்டயச்சு மாநிலத்தில் விளையாடி யேதிரியும்
கட்டணங்க ளாக கனமாய்க் குழுகுழென
ஓடுவார் பதறி விழுவா ரறமெலிந்து
நாடும் பெரியோர் நலமாக வாழ்ந்திருப்பார்

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments