Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 10291 - 10320 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 10291 – 10320 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 10291 – 10320 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சங்குத் துறைமுகத்து சதாகோடி யற்புதங்கள்
எங்கு மகிழ இயல்புபெற்ற திந்நகரு
மங்கைப் பதிநகரு மணவைப் பதிநகரு
கங்கைக் குலநகரு கண்ணாளர் தன்னகரு
பஞ்சவர்க ளஞ்சு பார்மன்னர் தன்னகரு
சஞ்சீவி தன்னகரு தவத்தோர்க் குருநகரு
தெய்வகுல மன்னர் சிறந்தக் குருநகரு
சைவ முனிமார் தவத்துக் கிதுநகரு
மேலோகக் காட்சி விளங்கிருக்கு மிந்நகரு
சாலோக சாமி சார்ந்திருக்கு மிந்நகரு
அரம்பை ஸ்திரீமார் ஆராடுஞ் சுனைநகரு
பரம்பெரிய சேடன் பவிசுக் குருநகரு
வாவி யுறைநகரு வைகைக் குருநகரு
வாவிக் குலாவும் சந்தப்பட்சி தன்னகரு
சொல்லஎளி தல்லகாண் தெச்சணா பூமிவளம்
நல்லதிந்த நாடு நமக்குகந்த நன்னாடு
பசுவும் புலியும் பாவித்திருந் தநகரு
கசுவு மெந்நேரம் கரைபுரளும் நன்னாடு
அந்நாடு நாடு அரனாட்டுக் கொப்பிடலாம்
பொன்னாடு நாடு புரந்தரநாட் டுக்கீடாம்
தவம்பெற்றோர் வாழ்ந்த தண்மைக் குருநாடு
பவமற்றோ ராகி பாவித்த தின்னாடு
நல்ல மலைவளரும் நாஞ்சி வளநாடு
சொல்லுருசி யானச் சிறந்த குருநாடு
ஒருநாடு மிந்நாட்டுக் கொவ்வாது வுத்தமரே
திருநாடு ஈசர் தினமுறையும் நன்னாடு
தீராவினையைத் தீர்த்தறுக்கு மின்னாடு
நீராளமான நிராதன மின்னாடு
சம்பத்துக் கேற்ற சகல குருநாடு
இன்பம் வளரும் இசைந்த குருநாடு

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments