Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 10261 - 10290 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 10261 – 10290 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 10261 – 10290 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சாகா வரங்கள் சனங்களுக் கேகொடுத்து
வாகாக நல்ல வரிசை மிகக்கொடுத்து
ஆண்பெண் ணுடனே அதிகவாழ் வுங்கொடுத்துக்
காணக் காணக்காட்சிக் கனமாய் மிகக்கொடுத்துச்
செல்ல வைகுண்டர் சீமையைம்பத் தாறதையும்
அல்ல லகற்றி அரசாள்வா ரீசுரரே
மும்மூர்த்தி யெல்லாம் ஒருமூர்த்தி யாயிருக்கும்
எம்மூர்த்தி யெல்லாம் இயல்மூர்த்தி போலிருக்கும்
வைகுண்டப் பெம்மான் வாய்த்தசெந் தூர்க்கடலில்
மைகொண்ட நாதன் வந்து பிறப்பதுதான்
வளர்ந்துதவம் செய்வதுவும் வாய்த்தபுவி தெச்சணமே
குழந்தை வைகுண்டர் குமாரப் பிராயமட்டும்
கோலா கலனாய்க் குருவாய்ச் சமையுமட்டும்
நாலாஞ் சொரூபம் நடத்தும்வரை தெச்சணமே
பொல்லாதெல் லாமழிந்து பூவர்கொலு வாகுமட்டும்
எல்லா வழக்கும் இருப்புந்தெச்ச ணாபதயே

விருத்தம்

ஆதியி லுதித்த வாறும் அரன்சிவன் பிறவி வாறும்
ஓதிய யுகங்கள் வாறும் ஒவ்வொரு அசுரன் வாறும்
நீதிய மனுக்கள் வாறும் நீதமாங் குண்டர் வாறும்
தீதிலாத் தர்ம ஞாயச் சிறப்புட வாறுஞ் சொன்னான்

தெச்சணாபூமி வளம்

நடை

இவ்வாறு எல்லாம் எடுத்துமிக மாமுனிவன்
அவ்வாறெல் லாமுரைத்து அகன்றனன்காண் மாமுனிவன்
துதிகொடு தன்னால் சிவகோ வேங்கிரியில்
பதியச் சிவமும் பதியென்றா ரன்போரே
நந்தீ சுரரும் நாட்டினா ரவ்வுரையை
இந்தப் பழமொழிபோல் இசைந்தப் புவிமகிமை
தெச்சணா பூமி சிவபூமி நல்லதுதான்
மிச்சம் வியாகர் முன்மொழிந்த துவுமிது
ஆனதா லிப்பூமி ஆகுந் தவசிருக்க
கோனாங் குமரி குடியிருக்கு மிந்நகரு

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments