Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 12151 - 12180 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 12151 – 12180 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 12151 – 12180 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நாம்நினைத் ததுபோலே நடந்து காரியந்தான்
தாம்நினைத் ததுபோலே தாநடந்து வீரெனவே
உத்தரவு சொல்ல உடைய வழிச்சான்றோர்
சித்தருட அருளால் சென்றார் தவமதுக்கே

விருத்தம்

தவமது செய்ய வென்று சடுதியிற் சான்றோ ரெல்லாம்
உகமது அளந்தோன் பாதம் உண்டென மனதி லாக்கி
வகைபொரு ளாசை யற்று மனைவிகள் மக்கள் கூட
திகையது நோக்கி வாரி துவரயம் பதியிற் சேர்ந்தார்

விருத்தம்

மண்ணுடன் மனைக ளாசை மாடுடன் வீடு மாசை
பெண்ணுடன் பொருளி னாசை பூதலப் பொன்னி னாசை
எண்ணுடன் எழுத்தி னாசை இடறுபொல் லாசை வேசை
ஒண்ணுடன் ஆசை நீக்கி உடையவ னாசை கொண்டார்

விருத்தம்

கொண்டுநல் மனதிற் பூண்டு குருபரா தஞ்ச மென்று
பண்டுநல் துவார கையின் பதிவாட வாசல் தன்னில்
தெண்டிரை வாவை சூழ்ந்த செகற்கரை தனிலே வந்து
கண்டுநற் பதியில் புக்கி கருத்துடன் இருந்தா ரன்றே

விருத்தம்

இருந்தவர் தலமும் பார்த்து ஏகநல் வெளியுங் கண்டு
பொருந்திடும் ஞான வான்கள் புண்ணிய மனதி லெண்ணி
வருந்திடக் கனிவே காணும் வாவைநற் பதியி தாகும்
தெரிந்திடக் கடலில் மூழ்கிச் சிவகலை யணிந்தார் தாமே

விருத்தம்

அணிந்தவர் பெண்ணு மாணும் அன்புடன் மகிழ்ச்சை கூர்ந்து
துணிந்தவர் தங்கள் தங்கள் துயரங்க ளறவே நீக்கப்
பணிந்தவர் நாதன் தன்னைப் பரிவுடன் மனதுள் ளாக்கித்
தணிந்தவர் கோப வேகத் தகுளியைத் தள்ளி வாழ்ந்தார்

நடை

வாழ்ந்தே தவசு வாகைப் பதியதிலே
தாழ்ந்தே சனங்கள் சந்தோச மாயிருக்க
அந்திசந்தி யுச்சி ஆகமூ ணுநேரம்
நந்தி யருளால் நல்ல துணிதுவைத்து
உவரிநீ ரில்துவைத்து உவரிநீ ரைக்குடித்து
உவரிநீர் தன்னில் உற்றன்ன மேசமைத்து

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments