Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 3271 - 3300 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3271 – 3300 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3271 – 3300 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பிஞ்சுமதி சூடும் பிஞ்ஞகனைப் போற்றாமல்
மாயனையு மெண்ணாமல் மதமா யிருந்ததினால்
ஆயனந்தச் சூரரையும் அழித்தார்கா ணீசுரரே
முச்சூர னோடாறு யுகமு முயிரழித்து
அச்சூரக் குடும்பம் அறுத்தந்த மாயவரும்
கொண்டிருந்த பொய்ச்சடலக் கூட்டை மிகக்களைந்து
ஆண்டிருந்த குண்டம் அவரடைந்தா ரம்மானை
முச்சூரன் துண்டம் ஒன்றுண்டு ஈசுரரே
அச்சூரன் பிறவி ஆறொன் றீரரையாய்
ஆறாம் யுகத்தில் அமையுமென்று மாமுனியும்
வீறாக ஈசுரரை விண்ணப்பஞ் செய்துநின்றான்
நல்லதுதா னென்று நாட்டமுற்று ஈசுரரும்
வல்லவனே மாமுனியே மாயன்வர வேண்டாமோ
என்றுநல்ல ஈசர் இயம்பமுனி யேதுசொல்வான்
நன்றுகாண் மாயவர்க்கு நாலுரண்டோ ராம்பிறவி
பிறக்கத் தவசு புரியப்போய்க் கீழுலகில்
உறக்க மெய்ஞ்ஞான ஒளியிருக்கி றாரெனவே
தேவமுனி சொல்ல சிவனா ரகமகிழ்ந்து
கோவுகத்தி லுள்ள குருவசிஷ்டர் தங்களையும்
தெய்வலோ கத்திலுள்ள தேவரை யும்வருத்தி
வைந்தலோ கத்திலுள்ள வாய்த்ததர்மி தங்களையும்
கிணநாதர் கிம்புருடர் கிங்கிலியரை யும்வருத்தி
இணையாக மேலோகத்(து) எல்லோரை யும்வருத்தி
சத்தி மறையும் சாஸ்திரத்தை யும்வருத்தி
அத்தி முகவனையும் ஆனவ கும்பனையும்
சங்கமறையை வருத்தித் தான்கேட்பா ரீசுரரும்
இங்குண்டோ மாலும் எங்கிருப்ப துண்டனவே
எல்லோ ருங்கூடி இதமித்துச் சொல்லுமென்றார்
அல்லோ ருங்கேட்க அரன்சொன்னா ரம்மானை
வேழமொத்த தேவரெல்லாம் மேகவண்ண ரிங்கேயில்லை

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments