HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4716 - 4720 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4716 – 4720 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4716 – 4720 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4716. தானான லோகத்து மாண்பரெல்லாம்
தகமையுள்ள ரேணுகையின் மாதுதன்னால்
கோனான குருபரனைத்
தான்மறந்தார் கொற்றவனார் சிவபூசை தானிழந்தார்
தேனான மனோன்மணியை
மனதிலெண்ணார் தேசொளியின் சின்மயத்தை
தானொழித்தார்
பானான வையகத்தை தான்மறந்து
பாங்கான ரேணுமோகங் கொண்டிட்டாரே
விளக்கவுரை :
4717. கொண்டாரே கோடிமனுசித்தரெல்லாம் குவலயத்தில் கெட்டழிந்து தட்டழிந்து
பண்டுளப
கிருஷ்ணாவதாரணைப்போல் பாருலகில் மோகவலை சிக்கினார்கள்
அண்டர்முனி தவரிஷிகள்
சித்துதாமும் அரிவையராம் ரேணுகையின் பாசத்தாலே
விண்ணுலகைத் தான்மறந்து
பாவங்கொண்டு விடுபட்டு நின்றார்கள் கோடிபேரே
விளக்கவுரை :

[ads-post]
4718. பேரான திரேதாயினுகத்திலப்பா
பெருமையுள்ள நவகோடி ரிஷிகள்தானும்
சீறான தவநிலையில்
நிலைகொள்ளாமல் சிக்கினார் கோடிபேர் முனிவர்தானும்
நேரான பவக்கடலுக்காளுமாகி
நேர்மையுள்ள இன்பசாகரத்தைவிட்டு
பாரான வையகத்தில்
தலைமேல்பாவம் பாங்குடனே கொண்டார் ரிஷிகள்காணே
விளக்கவுரை :
4719. காணவென்றால் காலாங்கி
நாதபாதா கைலாயங்கண்டதொரு சித்துதேவர்
வேணதொரு தவமுனிகள்
ரிஷிகள்தானும் விடுபட்டு வந்தார்கள் கிக்கிந்தாவில்
மாணமரும் பூபாலா யுன்னைப்போல
மகத்தான சித்தொளிவைக்கண்டதில்லை
பாணமது போலெழும்பி
சீனந்தன்னில் பட்சமுடன் குளிகைகொண்டு வந்திட்டாயே
விளக்கவுரை :
4720. வந்ததொரு காலாங்கி சீஷர்பாதா
கேள்வளமையுள்ள கலியுகத்தி லுன்னைப்போல
விந்தையுள்ள சிறுபாலா
யாருங்காணேன் விட்டகுறை இருந்ததினால் வந்தாயப்பா
சிந்தனையில் உந்தனையும்
ஆசீர்வதித்து துப்புரவாய் எண்ணமதில் வியனங்கொண்டு
அந்தமுடன் நின்றதொரு
தவநிலைக்கு வப்பனே சந்தோஷங் கொண்டிட்டேனே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments