Homeஎட்டுத் தொகைநற்றிணை 226 - 230 of 400 பாடல்கள்

நற்றிணை 226 – 230 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

நற்றிணை 226 – 230 of 400 பாடல்கள்
226. பாலை – கணி புன்குன்றனார்
மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
உரம் சாச் செய்யார் உயர்தவம் வளம் கெடப்
பொன்னும் கொள்ளார் மன்னர் நன்னுதல்
நாம் தம் உண்மையின் உளமே அதனால்
தாம் செய்பொருள் அளவு அறியார் தாம் கசிந்து
என்றூழ் நிறுப்ப நீள் இடை ஒழிய
சென்றோர்மன்ற நம் காதலர் என்றும்
இன்ன நிலைமைத்து என்ப
என்னோரும் அறிப இவ் உலகத்தானே
பிரிவிடை மெலிந்த தலைமகள் வன்புறை
எதிர்மொழிந்தது
விளக்கவுரை :
227. நெய்தல் – தேவனார்
அறிந்தோர் அறன் இலர் என்றலின் சிறந்த
இன் உயிர் கழியினும் நனி இன்னாதே
புன்னைஅம் கானல் புணர் குறி வாய்த்த
பின் ஈர் ஓதி என் தோழிக்கு அன்னோ
படு மணி யானைப் பசும்பூட் சோழர்
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்
கள்ளுடைத் தடவில் புள் ஒலித்து ஓவாத்
தேர் வழங்கு தெருவின் அன்ன
கௌவை ஆகின்றது ஐய நின் அருளே
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக
தோழி தலைமகனை வரைவு முடுகச் சொல்லியது
விளக்கவுரை :
228. குறிஞ்சி – முடத்திருமாறனார்
என் எனப்படுமோ தோழி மின்னு வசிபு
அதிர் குரல் எழிலி முதிர் கடன் தீர
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடு நாள்
பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்து
அருளான்கொல்லோ தானே கானவன்
சிறு புறம் கடுக்கும் பெருங் கை வேழம்
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ
அழுந்துபட விடரகத்து இயம்பும்
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச்
சொல்லுவாளாய் தலைமகன் கேட்பச் சொல்லியது
விளக்கவுரை :
229. பாலை – அறியப்படவில்லை
சேறும் சேறும் என்றலின் பல புலந்து
சென்மின் என்றல் யான் அஞ்சுவலே
செல்லாதீம் எனச் செப்பின் பல்லோர்
நிறத்து எறி புன் சொலின்திறத்து அஞ்சுவலே
அதனால் சென்மின் சென்று வினை முடிமின் சென்றாங்கு
அவண் நீடாதல் ஓம்புமின் யாமத்து
இழை அணி ஆகம் வடுக் கொள முயங்கி
உழையீராகவும் பனிப்போள் தமியே
குழைவான் கண்ணிடத்து ஈண்டித் தண்ணென
ஆடிய இள மழைப் பின்றை
வாடையும் கண்டிரோ வந்து நின்றதுவே
தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட
தோழி தலைமகளை ஆற்றுவித்துச் செல்ல உடன்பட்டது செலவு அழுங்குவித்ததூஉம் ஆம்
விளக்கவுரை :
230. மருதம் – ஆலங்குடி வங்கனார்
முயப் பிடிச் செவியின் அன்ன பாசடை
கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை
கணைக் கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போது
குணக்குத் தோன்று வெள்ளியின் இருள் கெட விரியும்
கயற்கணம் கலித்த பொய்கை ஊர
முனிவு இல் பரத்தையை எற் துறந்து அருளாய்
நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க
புதுவறம்கூர்ந்த செறுவில் தண்ணென
மலி புனல் பரத்தந்தாஅங்கு
இனிதே தெய்ய நின் காணுங்காலே
தோழி வாயில் மறுத்தது
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments