HomeUncategorizedஇடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 26 - 30 of 130 பாடல்கள்

இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 26 – 30 of 130 பாடல்கள்


இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 26 – 30 of 130
பாடல்கள்
26. அந்தக் கரணமெனச் சொன்னா லாட்டையும்
          அஞ்ஞான மென்னு மடர்ந்தவன் காட்டையும்
சந்தத் தவமென்னும் வாளினால் வெட்டினேன்
          சாவா திருந்திடக் கோட்டையுங் கட்டினேன்.       (தாந்)
விளக்கவுரை :
27. மெய்வாய்கண் மூக்குச் செவியென மைந்தாட்டை
          வீறுஞ் சுவையொளி யூறோசை யாங்காட்டை
எய்யாம லோட்டினேன் வாட்டினே னாட்டினேன்
          ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே.        (தாந்)
விளக்கவுரை :
28. பற்றிரண் டும்மறப் பண்புற்றேன் நன்புற்றேன்
          பாலையு முட்கொண்டேன் மேலையாங் கட்கொண்டேன்        
சிற்றின்பம் நீக்கினேன் மற்றின்பம் நோக்கினேன்
          சிற்பரஞ் சேர்ந்திட்டேன் தற்பரஞ் சார்ந்திட்டேன்.
(
தாந்)
விளக்கவுரை :
29. அண்ணாக்கை யூடே யடைத்தே யமுதுண்ணேன்
          அந்தரத் தரத்தை யப்பொழு தேயெண்ணேன்
விண்ணாளும் மொழியை மேவிப்பூ சைபண்ணேன்
          மெய்ஞ்ஞானம் ஒன்றன்றி வேறேயொன்றை நண்ணேன். (தாந்)
விளக்கவுரை :
30. மண்ணாதி பூதங்க ளைந்தையுங் கண்டேனே
          மாய விகாரங்கள் யாவையும் விண்டேனே
விண்ணாளி மொழியை மெய்யினுட் கொண்டேனே
          மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே.    (தாந்)
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments