HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 3851 - 3900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3851 – 3900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3851 – 3900 மூலிகைச் சரக்குகள்

காணத்தோதிக்கொடி – நரளைக்கொடி
காணப்பயறு – கொள்ளுப்பயறு
காணாதிருத்தி – அரை – பெண்குறி
காணாவஞ்சனி – மறைப்பு
காணிச்செடி – பொன்னாங்கண்ணிச்செடி
காணுசாரிவேர் – நன்னாரிவேர்
காண்டகச்செடி – நிலவேம்புச்செடி
காண்டகிகாச்செடி – நந்தியாவட்டைச்செடி
காண்டச்செடி – சீந்திற்கொடி
காண்டரிச்சாரணை – சத்திச்சாரணைக்கொடி
காதவமரம் – ஆலமரம்
காதறைப்புல் – சம்பங்கிப்புல்
காதாங்கிக்கொடி – பாற்சொற்றிக்கொடி
காதாளிகமரம் – சிறுசின்னிமரம்
காத்தொட்டிக்கொடி – ஆதண்டைக்கொடி
காந்தசத்துரு – வெடியுப்பு, நவச்சாரம்
காந்தண்மலர் – அருக்கன்மலர்
காந்தபன்னிகச்செடி – சன்னிநாயகச்செடி
காந்தபாஷாணம் -நவலோகத்துரட்டிப்பாஷாணம்
காந்தயச்சாரி மரம் – காய்ப்பூவரசுமரம்
காந்தாளிகக்கிழங்கு – சிறுகன்னிக்கிழங்கு
காந்துகம் – வெண்காந்தண்மலர்
காபிரம் – சாம்பிராணி
காப்பிக்கொட்டைச்செடி – கோப்பிக்கொட்டைச்செடி
காமப்பால் – காதம், விந்து
காமப்பூ – மதனகாமப்பூ
காமப்பூக்கொடி – வெண்பீர்க்குக்கொடி
காமரசமரம் – அகில்மரம்
காமரசாகிகப்பழம் – பேரிச்சம்பழம்
காமரசிக்கொடி – நெருஞ்சிற்கொடி
காமரசேபிகச்செடி – நத்தைச்சூரியச்செடி
காமரிக்கிழங்கு – புளிநரளைக்கிழங்கு
காமரியரிசி – நத்தைவீராசி
காமரிகச்செடி – புல்லூரிச்செடி
காமலம் – கழுதைலத்தி
காமனக்கிழங்கு – சிறுகிழங்கு
காமனச்சேதிகக்கொடி – நஞ்சறுப்பான்கொடி
காமன்புலி – திப்பிலி
காமாக்கிரியம் – கூடுதல், சேர்க்கை
காமாட்சிப்புல் – காவட்டம்புல்
காமுகமரம் – அசோகுமமரம்
காமூரி – ஆசை, இன்பம்
காம்பசிசகொடி – செந்நெருஞ்சிக்கொடி
காம்பீரமரம் – முருங்கைமரம்
காம்புகிப்பிரண்டை – நாகப்பிரண்டைக்கொடி
காம்புரிமரம் – மூங்கில்மரம்
காம்போகிகம் – குன்றிமணிகொடி
காம்போசக்கடுகுச்செடி – நாய்க்கடுகுச்செடி
காம்போசிகச்சசெடி – குதிரைவாலிச்செடி
காயசித்திச்செடி – பொன்னாங்கண்ணிச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments