HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 3901 - 3950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3901 – 3950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 3901 – 3950 மூலிகைச் சரக்குகள்

காயத்திரிமரம் – கருங்காலிமரம்
காயத்தேனுகச்செடி – நாகமல்லிகைச்செடி
காயத்தைலச்செடி – சீமைச்செடி
காயபேதிமரம் – மூவிலைக்குருந்துமரம்
காயம் – பெருங்காயம்
காயவள்ளிக்கிழங்கு – வெற்றிலைவள்ளிக்கிழங்கு
காயாங்குலைச்செடி – உலராங்குலைச்செடி
காயாதிகர்ப்பநீர் – அமுதநீர்
காயாப்பேரிஞ்சுமரம் – நாட்டுப்பேரிஞ்சுமரம்
காயாவரசு – உலவாசிகைமரம்
காய்த்தானியம் – நவதானியம்
காய்த்தும்பைச்செடி – பேயத்தும்பைச்செடி
காய்ப்பாகற்கொடி – பாகற்கொடி
காய்ப்புரசு – காட்டுப்புரசுமரம்
காய்ப்பூவரசுமரம் – பூவரசுமரம்
காய்வலாகமரம் – நக்குவரித்தென்னைமரம்
காய்வள்ளிக்கிழங்கு – வெற்றிலைவள்ளிக்கிழங்கு
காய்வாசியச்செடி – நாரா கரந்தைச்செடி
காய்வேளைச்செடி – தைவேளைச்செடி
காரசாரநீறு – பூநீறு
காரசீரம் – கருஞ்சீரகம்
காரஞ்செடி – காரைச்செடி
காரணக்காரிக்கொடி – வட்டச்சாரணைக்கொடி
காரபுகையிலைச்செடி – சுரட்டுப்புகையிலைச்செடி
காரப்புடோல் – பேய்ப்புடற்கொடி
காரம் – சீனாக்காரம்
காராசி – மட்டையரிசி
காரவலிக்கொடி – பாகற்கொடி
காரவல்லிக்கொடி – வெற்றிலைக்கொடி
காராக்கருணைக்கிழங்கு – சேனைக்கிழங்கு
காராடு – வெள்ளாடு – அசம்
காராமணிப்பயறு – சிறுமணிப்பயற
காராமுன்னைமரம் -பசுமுன்னைமரம்
காரி – காரியம் – கருவங்கம்
காரிகக்குவளைக்கொடி – நீலக்குவளைக்கொடி
காரிகச்செடி – ஆவிரைச்செடி
காரிகாலக்கொடி – பாகற்கொடி
காரிமைச்செடி – கொடிவேலிச்செடி
காரியகோரச்செடி – புகையிலைச்செடி
காரிரத்தப்கொடி – ஆடுதின்னாப்பாளைக்கொடி
காரிலவணம் – பிடாலவணம்
காருகத்திரிச்செடி – காரற்கத்திரிச்செடி
காருகத்தோமம் – குரோசாணியோமம்
காருகரணை – கருணைக்கிழங்கு
காருகவிமரம் – விடத்தலைமரம்
காருசப்பாசி – கடற்பாசி
காருணிக்கொடி – பசளைக்கொடி
காருண்ணிக்கொடி – ஆடுதின்னாப்பாளை
காருதவியச்செடி – கருநாயுருவிச்செடி
காருபச்செடி – மருக்காரைச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments