சித்த வைத்திய அகராதி 4351 – 4400 மூலிகைச் சரக்குகள்
குட்டிகாத்தக்காளி – சிறுதக்காளி
குட்டித்தேவிமரம் – விளாமரம்
குட்டியிடுக்கி – சிற்றரத்தை
குட்டிவாசுகிக் கள்ளி – சப்பாத்துக்கள்ளி
குட்டிவிளாச்செடி – நரிவிளாச்செடி
குட்டிளாதிதமஞ்சள் – சருகுமஞ்சள்
குட்டினம் – கருஞ்சீரகம்
குணக்கணடிவேர் – சிவதைவேர்
குணக்கமரம் – குருந்தமரம்
குணபலன் – அதிவிடையம்
குணபாகமரம் – சுக்குநாறிமரம்
குணாஞ்சிதப்பூ – மனோரஞ்சிதப்பூ
குணலாகிதப்பூ – சம்பங்கிப்பூ
குணலிக்கொடி – சீந்திற்கொடி
குணாலயப்புல் – அறுகம்புல்
குண்டலாதிச்செடி – சங்சஞ்செடி
குண்டலிகாக்கோரை – சம்பங்கோரை
குண்டலிக்கொடி – சீந்திற்கொடி
குண்டலிச்சம்பங்கிப்பூ – புற்சம்பங்கிப்பூ
குண்டலீகச்செடி – சங்கஞ்செடி
குண்டாணிக்கொடி – கொம்மட்டிக்கொடி
குண்டாதிச்செடி – பீநாரிச்சங்கஞ்செடி
குண்டிகச்செடி – பேரேலச்செடி
குண்டுமணி – குன்றிமணிக்கொடி
குண்டுமாணிக்கச்செடி -தூம்புரவாலிச்செடி
குண்டுமிளகாய் – குடைமிளகாய்
குண்டேந்திவேர் – மலைதாங்கிவேர்
குண்டோசனைக்கிழங்கு – குண்டோசரிக்கிழங்கு
குதநாயகக்கொடி – பெருமருந்துக்கொடி
குதப்புல் – தருப்பைப்புல்
குதப்பீரிகமரம் – சம்புநாவல்மரம்
குதமகாயம் – வெங்காயம்
குதம்பவக்கொடி – குரவந்தெல்லுக்கொடி
குதானகக்கொடி – தாளிக்கொடி
குதானத்திகக்கொடி – சம்பங்கிக்கொடி
குதிரைக்குளம்படி – பெருங்குளம்படி
குதிரைச்சாலிக்கீரை – துயிலிக்கீரை
குதிரைச்செவிக்கள்ளி – பரிச்செவிக்கள்ளி
குதிரைச்சேவிதச்செடி – சடைத்தும்பைச்செடி
குதிரைப்பற் பாஷாணம் – துரகத்பாஷாணம்
குதிரைப்பிடுக்கன்மரம் – பீநாறிமரம்
குதிரைக்பீஷன்மரம் – ஒட்டைமரம்
குதிரைப்பூரிதம் – குதிரைக்குளம்படிக்கொடி
குதிரைவாலிகச்செடி – கூந்தல்வரளிச்செடி
குதிரைவாலிகாக்கொடி – கொடிப்பாசி
குதிரைவாலியரிசி – பரிவாலியரிசி
குதிரைவாவிகப்புல் – கோரைப்புல்
குதும்பகச்செடி – தும்பைச்செடி
குத்தாகமரம் – குட்டிவிளாமரம்
குத்தாமணக்குச்செடி – உரலாமணக்குச்செடி




