சித்த வைத்திய அகராதி 6851 – 6900 மூலிகைச் சரக்குகள்
சுவர்ணபூதிச்செடி – மல்லிகைப்பூச்செடி
சுவர்தாங்கிப்பூடு – மலைக்காளான்
சுவளைமரம் – அரசமரம்
சுவற்பகாக்கரும்பு – செங்கரும்பு
சுவற்பவமரம் – பன்னீர்ப்பூமரம்
சுவாசகமுட்டி – சிற்றாமுட்டிச்செடி
சுவாசக்கோரை – பாய்க்கோரைப்புல்
சுவாசிதமுட்டி – பேராமுட்டிச்செடி
சுவாதகத்திமரம் – தோதகத்திமரம்
சுவாதகந்திகாமரம் – இத்திமரம்
சுவாதுகண்டக்கொடி – நெருஞ்சிற்கொடி
சுவாதுகத்தாந்திரிமரம் – வன்னிமரம்
சுவாதுகந்திச்செடி – துளசிச்செடி
சுவாதுசீதமரம் – தென்னைமரம்
சுவானவிட்டை – நாய்விட்டை
சுவானவிருட்சம் – சுணங்கவிருட்சம்
சுவிகாதிகமரம் – இத்திமரம்
சுவேகத்தட்டை – வெண்கரும்புத்தட்டை
சுவேதகரந்தைச்செடி – வெள்ளைவிஷ்ணுகரந்தைச் செடி
சுவேதகாண்டக்கொடி – சீந்திற்கொடி
சுவேதகாந்தவறுகு – வெள்ளறுகு
சுவேதகாரத்தட்டை – நாணற்றட்டை
சுவேதகாரிமரம் – விடமருதமரம்
சுவேதகிச்செடி -வெட்சிப்பூச்செடி
சுவேதகிச்சோளம் – வெண்சோளம்
சுவேதகிமரம் – மாவுலிங்கமரம்
சுவேதகிமல்லிகை – வெள்ளைவாடாமல்லிகை
சுவேதகியறுகுச்செடி – வெள்ளெருக்குச்செடி
சுவேதகூச்சரக்கொடி – வெண்வட்டச்சாரணைக்கொடி
சுவேதக்கொடி – வஞ்சிக்கொடி
சுலேதபசலிக்கொடி – வெண்பசலிக்கொடி
சுவேதமச்செடி – ஆற்றுமுள்ளங்கிச்செடி
சுவேதமாலிகாக்கொடி – வெண்சாரணைக்கொடி
சுவேதமூலினிச்செடி – தொட்டால்வாடிச்செடி
சுவேதவஞ்சிமரம் – வஞ்சிமரம்
சுவேதவமரம் – வெண்பாதிரிமரம்
சுவேதவாடிகச்செடி – தொட்டால்வரிச்செடி
சுவைகமச்செடி – மலையாமணக்குச்செடி
சுவையாதீதம் – உப்பு – கஞ்சியுப்பு
சுவ்வகில்மரம் – மலையிலவமரம்
சுழலாவிரை – பொன்னாவிரை
சுழற்காய்ச்செடி – சுண்டைக்காய்ச்செடி
சுழற்றிந்துகச்செடி – பின்தொடரிச்செடி
சுழிகோதைப்புல் – பீனசப்புல்
சுளட்டிச்செடி – வட்டச்சுளட்டிச்செடி
சுளிகாமரம் – வாகைமரம்
சுளிகாமேற்புல்லுருவி – வாகைமேற்புல்லுருவி
சுளிகைமரம் – முருங்கைமரம்
சுளிதவச்செடி – புளித்தகரைச்செடி
சுளியாரைக்கீரை – புளியாரைக்கீரை




