HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 8751 - 8800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8751 – 8800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 8751 – 8800 மூலிகைச் சரக்குகள்

நாட்டாரஞ்சி – நாட்டுக் கிச்சிலிப்பழம்
நாட்டிகச்சோளம் – வெண்முத்துச்சோளம்
நாட்டுச்சருக்கரை – கரும்புச்சருக்கரை
நாட்டுச்சாரிச்செடி – சுடலையாவரைச்செடி
நாட்டுச்சிவதை – சிவதை
நாட்டுக்சுரைக்கொடி – பெருஞ்சுரைக்கொடி
நாட்டுபாழைமரம் – வாழைமரம்
நாணங்கப்புல் – கஸ்தூரிநாறிப்புல்
நாணற்கரும்பு – பேய்க்கரும்புத்தட்டை
நாணற்கரும்புத்தோகை – சிகைத்தோகை
நாணற்தட்டை – நாணற்புல்தட்டை
நாணற்பூ – நரைத்தபூ
நாணாங்கள்ளி – இலைக்கள்ளி
நாணுகக்கள்ளி – குதிரைச்செவிக் கள்ளி
நாதம் – கந்தகம் – சுக்கிலம்
நாதரவிச்செடி – வெண் கண்டங்கத்தரிச்செடி
நாதவத்தக்கொடி – பெருநெருஞ்சிற்கொடி
நாதாந்தி – பொன்னிமிளை
நாதேனிகச்செடி – மணத்தக்காளிச்செடி
நாபிக்கிழங்கு – பச்சைநாவிக் கிழங்கு
நாவிக்கூரிகக்கொட்டை – நேர்வாளக்கொட்டை
நாபிக்கொடி – நஞ்சுக்கொடி
நாபியச்செடி – வெள்ளுமத்தைச்செடி
நாமகச்செடி – தும்பைச்செடி
நாமகாமரம் – நாரத்தைமரம்
நாமகிப்பத்திரி – சாதிப்பத்திரி
நாமசேயக்கொடி – வெண்சாரணைக்கொடி
நாமவந்தக்கொடி – பெருந்தும்பைச்செடி
நாயாஞ்சிச்செடி – நாயுருவிச்செடி
நாயிருதிரும்பிச்செடி – பொழுதுவணங்கிச்செடி
நாயுருவிச்செடி – வெண்நாயுருவிச்செடி
நாய்கரத்தான்கொடி – குன்றிமணிக்கொடி
நாய்க்கடிபோக்கி – நாய்க்கடுகுச்செடி
நாய்க்கடுகுச்செடி – நாய்வேளைச்செடி
நாய்க்கடுபுவிரை – சுன்னக்கடுகுவிரை
நாய்க்கற்றாழை – பேய்க்கற்றாழை
நாய்க்கொட்டான்மரம் – காட்டுக்கொட்டான்மரம்
நாய்ச்சாறு – நாய்மூத்திரம்
நாய்ச்சீரகம் – நாட்டுச்சீரகம்
நாய்ச்சீலிகம் – நாய்க்கட்டம்
நாய்ச்சுண்டை – பேய்ச்சுண்டை
நாய்ச்சோனகமரம் – வெண்துவரைமரம்
நாய்துளசிச்செடி – காட்டுத்துளசிச்செடி
நாய்நாக்கிப்பூடு – இலைக்கள்ளிப்பூடு
நாய்நாக்குக்கள்ளி – இலைக்கள்ளி
நாய்ப்பாகலியம் – நாய்மூத்திரம்
நாய்ப்பாகல் – காட்டுப்பாகல்
நாய்ப்பாக்கு – சிறுசிலும்பான்செடி
நாய்ப்பாலை – நஞ்சறப்பாஞ்சான்கொடி
நாய்ப்பீசன்செடி – நாய்ப்பிடுக்கன்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments