HomeUncategorizedசிவவாக்கியம் 141 - 145 of 525 பாடல்கள்

சிவவாக்கியம் 141 – 145 of 525 பாடல்கள்


சிவவாக்கியம் 141 – 145 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

141.
நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி
மந்திரம்
நூறுகோடி நாள்இருந்து ஓதினால் அதுஎன்பயன்?
ஆறும்ஆறும் ஆறுமாய் அகத்தில்ஓர் எழுத்துமாய்
ஏறுசீர் எழுத்தைஓத ஈசன்வந்து பேசுமே!
விளக்கவுரை :
142.
காலைமாலை தம்மிலே
கலந்துநின்ற காலனார்
மாலைகாலை யாச்சிவந்த மாயம்ஏது செப்பிடீர்?
காலைமாலை அற்றுநீர் கருத்திலே ஒடுங்கினால்
காலைமாலை ஆகிநின்ற காலன்இல்லை இல்லையே.
விளக்கவுரை :

[ads-post]

143.
எட்டுமண்ட லத்துளே
இரண்டுமண்டலம் வளைத்து
இட்டமண்ட லத்துளே எண்ணிஆறு மண்டலம்
தொட்டமண்ட லத்திலே தோன்றிமூன்று மண்டலம்
நட்டமண்ட லத்துளே நாதன்ஆடி நின்றதே!
விளக்கவுரை :
144.
நாலிரண்டு மண்டலத்துள்
நாதன்நின்றது எவ்விடம்
?
காலிரண்டு மூலநாடி கண்டதங்கு உருத்திரன்;
சேலிரண்டு கண்கலந்து திசைகள் எட்டுமூடியே
மேலிரண்டு தான்கலந்து வீசிஆடி நின்றதே.
விளக்கவுரை :
145.
அம்மைஅப்பன் உப்புநீர்
அறிந்ததே அறிகிலீர்
;
அம்மைஅப்பன் உப்புநீர் அரிஅயன் அரனுமாய்
அம்மைஅப்பன் உப்புநீர் ஆதியாதி ஆனபின்
அம்மைஅப்பன் நின்னைஅன்றி யாரும்இல்லை ஆனதே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments