HomeUncategorizedசிவவாக்கியம் 231 - 235 of 525 பாடல்கள்

சிவவாக்கியம் 231 – 235 of 525 பாடல்கள்


சிவவாக்கியம் 231 – 235 of 525
பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

231.
விழுத்தகண் குவித்தபோ
தடைந்துபோய் எழுத்தெலாம்
விளைந்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே
அழுத்தினாலு மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில்
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை ஆனதே.
விளக்கவுரை :
232.
நல்லமஞ் சனங்கள்தேடி
நாடிநாடி ஓடுறீர்
நல்லமஞ் சனங்களுண்டு நாதன்உண்டு நம்முளே
எல்லைமஞ் சனங்கள்தேடி ஏகபூசை பண்ணினால்
தில்லைமேவும் சீவனும் சிவபதத்துள் ஆடுமே.
விளக்கவுரை :

[ads-post]

233.
உயிர்அகத்தில் நின்றிடும்
உடம்பெடுத்த தற்குமுன்
உயிர்அகாரம் ஆயிடும் உடல்உகாரம் ஆயிடும்
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது அச்சிவம்
உயிரினால் உடம்புதான் எடுத்தவாறு உரைக்கினேன்.
விளக்கவுரை :
234.
அண்டம்ஏழும் உழலவே
அனந்தயோனி உழலவே
பண்டைமால், அயனுடன் பரந்துநின்று உழலவே
எண்திசை கடந்துநின்ற இருண்டசத்தி உழலவே
அண்டரண்டம் ஒன்றதாய் ஆதிநட்டம் ஆடுமே.
விளக்கவுரை :
235.
உருவநீர் உறுப்புகொண்டு
உருத்தரித்து வைத்திடும்
பெரியபாதை பேசுமோ பிசாசைஒத்த மூடரே,
கரியமாலம் அயனுமாக காணொணாத கடவுளை
உரிமையாக உம்முளே உணர்ந்துணர்ந்து கொள்ளுமே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments