HomeUncategorizedThirukural 667 of 1330 - திருக்குறள் 667 of 1330

Thirukural 667 of 1330 – திருக்குறள் 667 of 1330

Thirukural
667 of 1330 –
திருக்குறள் 667 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்திட்பம்.
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
Translation:
Despise not men of modest bearing; Look not
at form, but what men are:
For some there live, high functions
sharing, Like linch-pin of the mighty car!.
Explanation:
Let none be despised for (their) size;
(for) the world has those who resemble the linch-pin of the big rolling car.
கலைஞர் உரை:
உருவத்தால் சிறியவர்கள் என்பதற்காக யாரையும் கேலி செய்து அலட்சியப்படுத்தக் கூடாது. பெரிய தேர் ஓடுவதற்குக் காரணமான அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.

[ads-post]
மு. உரை:
உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
அச்சாணி சிறியது எனினும் உருளுகின்ற பெரிய தேருக்கு அது உதவுவது போல, மன உறுதி உடையவர்கள் வடிவத்தால் சிறியர் எனினும் செயலால் பெரியர் என்பதால் அவரை இகழக்கூடாது.
மணக்குடவர் உரை:
யாவரையும் வடிவுகண்டு இகழ்தலைத்
தவிர்தல் வேண்டும்
. உருளாநின்ற
பெரிய தேர்க்குக் காலாய் நடக்கின்ற உருளையைக் கழலாமல் தாங்கும் அச்சின் புறத்துச்
செருகின சிற்றாணியைப் போலத் திண்ணியாரை இவ்வுலகம் உடைத்து
: ஆதலால்.
பரிமேலழகர் உரை:
உருள் பெருந்தேர்க்கு அச்சு ஆணி
அன்னார் உடைத்து
உருளா
நின்ற பெரிய தேர்க்கு அச்சின்கண் ஆணிபோல வினைக்கண் திண்ணியாரையுடைத்து உலகம்
; உருவு கண்டு
எள்ளாமை வேண்டும்
அதனால்
அவரை வடிவின் சிறுமை நோக்கி இகழ்தலை யொழிக
. (சிறுமை, ‘எள்ளாமை வேண்டும்என்பதனானும், உவமையானும் பெற்றாம், அச்சு: உருள் கோத்த மரம். ஆணி: உருள் கழலாது
அதன் கடைக்கண் செருகுமது
.
அது வடிவாற் சிறிதாயிருந்தே பெரிய பாரத்தைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைத்து, அதுபோல, வடிவாற்
சிறியராயிருந்தே பெரிய வினைகளைக் கொண்டுய்க்கும் திட்பம் உடைய அமைச்சரும் உளர்
, அவரை அத்திட்பம்
நோக்கி அறிந்துகொள்க என்பதாம்
. இதனால், அவரை அறியுமாறு கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments