Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 10231 - 10260 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 10231 – 10260 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 10231 – 10260 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வல்ல கலியுகத்தில் வாய்த்ததெச்ச ணாபுவியில்
புதுமை மிகச்செய்து பொல்லாத வம்பர்கையால்
அடிகல் லெறிகள் அவர்பட் டம்புவியில்
குடிதாழ்ந்த பேர்க்காய்க் கோப மதையடக்கி
நல்லோர்க்காய்ப் பாடுபட்டு நல்லஉப தேசமதாய்ப்
பொல்லாரை மோட்ச புகழாகதவமிருக்க
பஞ்சகரு ணாதிகளைப் பம்மலாய்த் தானடத்திக்
கொஞ்சநா ளுங்கழித்து குதித்துதித் தேவளர்ந்து
ஆடவராய்ச் சமைந்து ஆண்பெண்போ லேயிருந்து
தேவ அறிவார்க்குத் திரவியம்போ லேயிருந்து
பச்சைக் குழந்தை பருவமுன் னாகியவர்
மெச்சக் கொடியாட்கு மேவும்பரு வம்போலும்
சுத்தக் கிழவரைப்போல் சூரப்பி ராயமுமாய்
மெத்தப் புலம்பி விழலும்பிரா யம்போலும்
நாலு பிராயம் நாளதுக்குள் ளேயெடுத்துக்
கோலு கையேந்திக் குன்னும்பிரா யம்போலும்
பார்க்கப் பிராயமுமாய்ப் படுக்கக் கிழவனுமாய்த்
தார்க்கத் திறவனுமாய்ச் சந்திக்கிசைந் தவனுமாய்க்
காக்கக் கருத்தனுமாய்க் கர்த்தனின் கர்த்தனுமாய்
ஏக்கத் திருத்தனுமாய் இவர்சமைந் திவ்வுகத்தில்
தர்மத்தால் கலியைத் தன்னந்தன்னால் கரைத்துக்
கர்மத்தை யீடழித்துக் காந்தக்கோ லுமெடுத்து
நேரோரைக் காத்து நிசமாக வேயெழுப்பி
ஏராரைக் கொன்று ஏழ்நரகத்தும் பூத்தி
உகத்துக் குகம்வழக்கு எல்லா மொருதலத்தில்
தொகுத்து நடுத்தீர்ப்புச் செய்து மிகத்தெளித்து
ஆகாத்த பேரை எல்லாம் நரகமதில்
வாகாகத் தள்ளி வாசல்தனைப் பூட்டிச்
சித்தத்துக் கேற்ற செடத்தோரைத் தானெழுப்பிப்
பத்தரைமாத் துற்றப் பைம்பொன்னிறப் பொற்பதியில்

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments