Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 8731 - 8760 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 8731 – 8760 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 8731 – 8760 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அறந்தழைக்க நன்றாய் அதுகுதிக்கு மென்றுசொல்லு
மாழுவது மாண்டு மனதுகந்த தேமுழிக்கும்
முழுவதை நீக்கி முழிப்பதுவே கண்டுகொள்ளும்
ஒருநெல் லெடுத்து உடைக்கநாடு கேட்டுக்கொள்ளும்
இருநெல் லெடுத்து உடைக்கநாடு தாங்காது
மலைக ளுதிர்ந்துவிடும் வான மழிந்துவிடும்
தலைநாட் சேத்திரமும் தானுதிரும் ஆலங்காய்போல்
என்றுநா லாம்விஞ்சை இதுதானே என்மகனே
கனமாகக்கேளு காரணத்தின் நல்விளக்கே
சத்தமொன் றானதிலே தானிதெல்லா மாகுமென்று
சித்த முடனே செப்பியிரு என்மகனே
ஆயிரத் தெட்டு அதில்வாழுந் தேவருக்கு
வாயிதமாய் விஞ்சை வகுப்பேன்கே ளென்மகனே
நாட்டுக் குடைய நாரா யணர்தானும்
ஆட்டுக் கொடைபூசை அனுப்போலும் வேண்டாமென்று
சொல்லியே தர்மமுற்றுச் சிறையாகத் தானிருக்கத்
தொல்லுலகி லாரேக்கார் பார்ப்போமென்று சொல்லிடுநீ
தூறான பேய்களுக்குச் சொல்லு முறைகேளு
வாறான நாரணர்தான் வாய்த்ததர்ம மேநினைத்துக்
கவிழ்ந்து சிறையிருக்குங் காரணத்தா லோகமெல்லாம்
உவந்து திரியும் உயிரிப்பிராணி யாதொன்றையும்
இரத்த வெறிதீபம் தூபமிலைப் பட்டைமுதல்
சற்றும் வெலிபாவம் தான்காண ஒட்டாதெனத்
தர்மம் நினைத்துத் தவசிருக்கேன் நாரணனும்
உற்பனமா யறிந்தோர் ஒதுங்கியிருங் கோவெனவே
வீணப் பசாசறிய விளம்பியிரு என்மகனே
நாண மறியாமல் நன்றிகெட்ட நீசர்குலம்
சாணான்எனவே சண்டாள நீசரெல்லாம்
வீணாய்நரகில் விழுவதறியாமல்
மட்டை யெடுத்தடிப்பார் மண்கட்டி கல்லெறிவார்

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments