Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 8761 - 8790 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 8761 – 8790 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 8761 – 8790 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சட்ட மசையாதே தன்னளவு வந்தாலும்
நாட்டைக் கெடுத்த நவின்றகலிச் சக்கரத்தில்
ஓட்டைக் கலத்ததிலும் உக்கு மிரும்பதிலும்
முழியாதே யென்மகனே மும்முதற்கும் நாயகமே
அழிவாகிப் போகும் அன்புகெட்ட நீசருடன்
பொய்யரோ டன்பு பொருந்தி யிருக்காதே
மெய்யரோ டன்பு மேவியிரு என்மகனே
வர்மமதை வதைக்க வந்தேனெனச் சொல்லிமிகத்
தர்ம மதைவளர்க்கத் தரணியில் வந்தேனென்று
இம்முதலே யாறு இருப்பே தவசுபண்ணி
மும்முதலோ னாகி முறைநடத்து என்மகனே
மூக்குச் சுழியும் முச்சுளியும் முத்திமுத்தி
நோக்குச் சுழியாய் நேர்நில்லு என்மகனே
பரமான பட்டணத்தில் பார்வைகொண் டேநாட்டிச்
சிரமானது விரித்துச் சிறையே யிருமகனே
ஏற்பதுபால் பச்சரிசி இருப்பது பார்மேலாகும்
காப்பதுமா தர்மம் கண்ணே திருமகனே
சந்தன வாடை சாந்துசவ் வாதுபுஸ்பம்
எந்தன் திருமகனே எள்ளளவும் பாராதே
வாடைபூ தீபம் மகிழாக் கலியுகத்தில்
நாடை யழித்து நல்லயுக மேபிறந்தால்
கல்லாரை எல்லாம் கரகயாமமுரைத்து
சொல்ல வொண்ணாத சுகந்தருவே னென்மகனே
கண்டாயோ மகனே கரிய பவிசுஎல்லாம்
கொண்டாயோ விஞ்சை கூடுபிர காசமதாய்
அப்போது தான்பிறந்த அந்தவைகுண் டருரைப்பார்
இப்போ தென்பிதாவே என்னையீன்றே யெடுத்துப்
பருவமதாய் வளர்த்துப் பகர்ந்தீரே ஞாயமெல்லாம்
உருவுபிர காசமதாய் உபதேசஞ் செய்தீரே
தங்க முடிவேந்தே தகப்பனே நீர்கேளும்

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments