Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 9301 - 9330 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9301 – 9330 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9301 – 9330 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சீதை மயக்கமெல்லாம் தீர்ந்திடவே சாபமிட்டு
வீரரையும் வந்து வீரலட்சு மியெடுத்து
மடிமீதில் வைத்து மாதுசர சோதியுடன்
குடியான பேரும் கொண்டங் ககமகிழ்ந்து
பொன்தொட்டி லிட்டுப் பொற்சீதை தாலாட்ட
பைங்கொடி யாள்சரசு பதிமாது தாலாட்டத்
தேவரிஷி வானோர் தேவரம்பை மாதரெல்லாம்
சீவசெந் தெல்லாம் திருப்பாட்டுப் பின்பாட
ஈசர்முதல் சங்கம் எண்ணி மனமகிழச்
சார்சர சுபதியாள் தாலாட்ட வேதுணிந்தாள்

விருத்தம்

பொன்மணிப் பதியி னுள்ளே புனலரி கிருஷ்ணர் பெற்ற
தண்மணிப் பாலன் தன்னைத் தங்கமாந் தொட்டி லிட்டு
மின்மணி கொடிசேர் கன்னி விளங்கிய சோதி மாது
கண்மணி வைந்த ராசர் காணத்தா லாட்டி னாளே

தாலாட்டு

தார தரதர தாராரோ தார தரதர தாராரோ
நாராயணர் தானோ தாராரோ நல்ல நாராயண வைகுண்டமோ
காரணர் தானோ வைகுண்டமோ கயிலாச நாதக் கண்மணியோ
செல்வ முதலான சீமானோ சிவசிவ சிவ சிவமுதலோ
அல்ல லகற்றியே அரசாளும் அரியோன் மிகப்பெற்ற அரிதானோ
தெய்வப் பெருமாள்தான்
பெற்றகன்றோ சீதை மாதுதான் பெற்றகன்றோ
மெய்ய னரிநாதன் பெற்றகன்றோ விஷ்ணு மகாபரன் பெற்றகன்றோ
ஈசர் மைத்துனர் பெற்றகன்றோ இறவா திருமாது பெற்றகன்றோ
மாயத் திருவுளம் பெற்றகன்றோ மான வைகுண்ட ராசக்கன்றோ
வேதக் குருநாதன் பெற்றகன்றோ வீர லட்சுமி ஈன்றகன்றோ
சீதக் குருதாயா ரீன்றகன்றோ தெய்வ வைகுண்ட ராசக்கன்றோ
கிருஷ்ண மகாநாதன் பெற்றகன்றோ கிருபைக் குருநாதக் கண்மணியோ
விஷ்ணு மகாநாதன் பெற்றகன்றோ வீர லட்சுமி ஈன்றகன்றோ
தார தரதர தாராரோ தார தரதர தாராரோ
நாட்டுக் குடையதோர் நாரணரின் நல்ல பாலனோ வைகுண்டனோ

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments