Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 9331 - 9360 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9331 – 9360 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9331 – 9360 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஏட்டு முதலானோ தாராரோ ராச வைகுண்ட ராசர்தானோ
மூலச் சிவநாதன் பெற்றகன்றோ உலகை யொருகுடைக் கள்வானோ
நாலு வேதமும் தாண்டிமுறை நடத்தி யொருகுடைக் கள்வானோ
ஒருமை மனத்துடை யுத்தமர்க்கு உற்ற பதவிகள் கொடுப்பவனோ
தருமத் திறவானோ தாராரோ தங்க வைகுண்டத் தாட்டீகனோ
மகரச் சீதையாள் வயிற்றுலுற்ற வளர்ந்த வைகுண்ட மாமணியோ
அகரச் சிவகோபுர மழகுபதி அதிகப் பதிகெண்டு வந்தவரோ
தங்கக் கோபுரம் தளிர்மரமும் சதுர மேடைகள் கண்டவரோ
சங்க மகிழவே வந்தவரோ சகல கலைதமி ழாய்ந்தவரோ
உலகம் பதினாலு மொருகுடைக்குள் ஒரு
சொல் மொழிக்காள  வந்தவரோ
இலகு பிரகாச சுவடுகொண்டு இலங்கும் பதியாளப் பிறந்தவரோ
வம்புக் கலியுகக் குலமறுத்து வைந்தப் பதியாள வந்தவரோ
அம்புக் கணையொன்று மில்லாமலே அறுக்க வந்தாரோ கலிதனையும்
கூடப் படைகள்துணை யில்லாமல் குறும்பை யடக்கவே வந்தவரோ
சாடத் தலையாரி யொன்றில்லாமல் சதைக்க வந்தாரோ கலியுகத்தை
வாளு மாயுத மெடுக்காமலே வதைக்க வந்தாரோ கலியுகத்தைக்
கோளு பேய்களைக் கிரகங்களைக் கொல்ல வரம்பெற்ற வைகுண்டரோ
சாணாக் குருநாத வைகுண்டரோ சாதி தற்காக்குந் தலையாரியோ
காணாக் கருவான கருமூலமோ கர்த்தன் கர்த்தாதிக் கடவுள்தானோ
நீசக் குலங்களைக் கருவறுக்க நெடிய நாரணர் பெற்றகன்றோ
தோசப் புழுச்சாதி குலமறுக்கத் திருமால் நாரணர் பெற்றகன்றோ
சீமை மைம்பத்தாறு தேசமெல்லாம் சொல்லொன் றுள்ளாள வந்தவரோ
நாமம் பெரியதோர் வைகுண்டரின் நாமம் பெறவோங்க வந்தவரோ
தெய்வப் பாலர்கள் சிறந்துபோற்றச் சீமை யரசாள வந்தவரோ
மெய்வ ரம்பதின் முறைநடத்தி மேன்மைச் செங்கோல் முடிதரித்து
பொறுமைப் பெரியோனோ
வைகுண்டனோ பெரிய பூமேடைக் கொலுவீரனோ
தர்ம வரம்புகள் தவறாமலே தரணி யரசாளும் வைகுண்டரோ
திராசு நிறையிலுந் துல்லியமாய்ச் செங்கோல் செலுத்தவே வந்தவரோ

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments