Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 9751 - 9780 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9751 – 9780 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 9751 – 9780 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஈசுரர் தாமே கலியனையும் பிறவிசெய்து
இருநூற்று முப்பது நூறாயிரம் வருஷமாகக்
கட்டங்கொடுமை செய்து அவனியரசாண்டு
கன்னிமக்களாகிய சான்றோர் படுகிற மறுக்கம் பொறுக்காமலே,
வியாகரிடை முனிவர் வகுத்த ஆகமத்தின் படியே
மகாபர நாராயணர் தாமே வைகுண்டமாய்ப் பிறந்து
ஒரு குடைக்குள் 1008 ஆம் ஆண்டு மாசியிலே
அஞ்சி மூவஞ்சி தேதியிலே அவனிமனுவிலே
ஆதிச்சாதியிலே மனுநிறமாக வந்திருந்து
சாதி பதினெண்ணையும் ஒருதலத்தில்
வருத்தியே தர்மமாய்த் தாரணி யாபேர்க்கும்
சஞ்சல நோய்பிணி தண்ணீரால் தீர்க்கவும்
சந்ததியில்லாத பேர்க்குச் சந்ததி கொடுக்கவும்
தனமில்லாத பேர்க்குத் தனங்கொடுக்கவும்
சாதைவாதை பேய்களைச் சரிவிலே எரித்துக் கரியச்
செய்யவும் தரணியேழு கணக்கையும் கேட்டு மிக
சத்தியாய் அன்பு மனிதருக்காகவே தரணியில்
நாலுதரம் சளங்கள் படவும்
சாஸ்திரவேத நூலுக்குச் சரியொத்தி
பேர்களுக்கு உபகாரங்கள் செய்யவும்;
சண்டையாய்க் கலியனைத் தன்னாலே போக்கவும்
தர்மமாகத் தரணியோர் குடைக்குள்ளாளவும்
தங்கநவரத்தினத் திருமுடி சூடியே
சகலமாபதி மேடைகள் பாவிக்கவும்
தவசு கிருபை பெறவும்,
தங்கமணி சக்கராயுதக் கொடி ஒற்றைக்கொடி கட்டவும்
சகலரும் புகழவரும் தர்மராசாவாகவும்
சங்கவிருதுக் கொடி ஒத்தக் கொடி கட்டவும்
அஷ்டதிக்குப் பதினாலு லோகமுமறிய அசையா
மணியொன்று கட்டியே அரசு பாவிக்கவும்,

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments