Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 10801 - 10830 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 10801 – 10830 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 10801 – 10830 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

எவர்தா னெதிர்த்து இல்லையென்று சொல்லுவது
மூவரு மங்கே ஒடுங்கி யிருக்கையிலே
அல்லாமல் நீசன் அழிவாகு முன்னதியாய்
எல்லாமவ னோடுளது ஏலமே சாகணுமே
நீசன் வலுவெல்லாம் நேர்முன்னே தானறுத்து
ஓசையொன்றுக் குள்ளே உகங்கேட்க நிச்சயித்தீர்
நன்றிகெட்ட நீசன்வேர் நாள்வழியே நீரறுத்து
ஒன்று விளிக்குள் உகமழித்துத் தீர்ப்புசெய்து
நல்லோரை யெழுப்பி நகரொருசொல் லுள்ளான
வல்லோராய் நீரும் வரம்பெற்ற மாதவமே
ஆனதினால் பேய்கள் அந்நீசக் குலமதினால்
வானக் கனலில் மாளுமிக் காலமிதாம்
என்று முனியுரைக்க ஏற்றவை குண்டமுதல்
நன்று முனியே நம்பேரில் குற்றமில்லை
முன்னுள்ள ஆகம முறைநூற் படியாலே
என்னூ லொழுங்கில் எரிக்கிறே னிப்பேயை
மாமுனியே நீசாட்சி மாயாண்டி நீசாட்சி
நாமுனியே சாட்சி நல்லவரே நீசாட்சி
எல்லோருஞ் சாட்சி என்பேரில் குற்றமில்லை
வல்லாத்தான் வைகுண்ட மாலவ ருஞ்சாட்சி
என்றுநா ராயணரும் எரிக்கலுற்றார் பேய்களையும்
பண்டு அந்தப்பேயைப் பார்மீதில் கொண்டாடும்
நருட்கள் மிகப்பார்த்து நாலைந்து தான்தாக்கிக்
கருக்கிவிட வென்று களிவைத் தலையாட்டி
மனுக்க ளறிய மனுநருளைத் தானாட்டித்
தனுக்கள் மிகவாங்கத் தானினைத்தா ரம்மானை
அப்போ நருள்பேரில் ஆடும்பே யேதுசொல்லும்
இப்போது சுவாமி எங்களொக்கத் தானெரித்துத்
தனியே யரசாள சாதியொன்று தானெடுத்துச்
இனியரசமான கருணாகர பொருளே.

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments