HomeUncategorizedபாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் 126 - 129 of 129 பாடல்கள்

பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் 126 – 129 of 129 பாடல்கள்


பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் 126 – 129 of 129
பாடல்கள்
126. ஆணிக் குடத்திலே பாம்ப டைப்போம்
          அக்கினிக் கோட்டைமே லேறிப் பார்ப்போம்
மாணிக்கத் தூணின் விட்டே யாட்டுவோம்
          மனம்வாக்குக் காயத்தை யிரைகொ டுப்போம்
நாணிக் கயிற்றையும் அறுத்து விடுவோம்
          நமனற்ற நாதன்பதம் நாடியே நிற்போம்
ஏணிப் படிவழிகண் டேறி விடுவோம்
          யாருமிதை அறியாரென் றாடாய் பாம்பே.
விளக்கவுரை :
127. வடக்குங் கிழக்குமாக நூலை யிழைப்போம்
          மற்றுஞ் சுழலிலே பாவு பூட்டுவோம்
நடக்கும் வழியினிலே யுண்டைசேர்ப்போம்
          நடவா வழியினிலே புடவை நெய்வோம்
குடக்குக் கரையினிலே கோலைப் போடுவோம்
          கொய்ததை எங்குமே விற்று விடுவோம்
அடக்கியே யேகத்துளே வைக்கவும் வல்லோம்
          ஆதிபதங் கண்டோமென் றாடாய் பாம்பே.
விளக்கவுரை :
128. சூத்திரக் குடத்திலே பாம்பை யடைப்போம்
          சுழுமுனைக் குள்ளேயோ சுகித்தி ருப்போம்
பாத்திரங் கொண்டுமே பலியி ரப்போம்
          பத்தெட்டு மூன்று படிகட ந்தோம்
ஊத்தைச் சடலத்தினைப் புடமே யிடுவோம்
          உளவ னெமக்குநல் லுறுதி சொல்லப்
பார்த்துரை யிதன்மெய் பலிக்க வெண்ணிப்
          பதனம் பதனமென் றாடாய் பாம்பே.
விளக்கவுரை :
129. மவ்வக் குடத்திலே பாம்ப டைப்போம்
          மணிவட்ட வாசியை வாரி யுண்டோம்
வவ்வக் குடங்களைத் தள்ளி விடுவோம்
          வக்கிர சொர்ப்பனந் தாண்டி விடுவோம்
பவ்வ வெளியிலே விட்டே வாட்டுவோம்
          பஞ்ச கருவியைப் பலிகொ டுப்போம்
சிவ்வுரு வாகியே நின்றோ மென்றே
          சீர்பாதங் கண்டுதெளிந் தாடாய் பாம்பே.
விளக்கவுரை :
பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் முற்றும்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments