Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 10201 - 10230 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 10201 – 10230 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 10201 – 10230 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தன்னன் பிறப்பும் சாற்றத் திறவான்காண்
கல்லாத கல்வி கலைக்கியா னக்காண்டம்
எல்லா மறிந்த இயல்முனிவ னென்றுரைக்க
நல்லதுதா னென்று நன்முனிவனை ஈசர்
வல்லமையா மென்று மாமுனியைக் கொண்டாடி
என்பிறப்பு என்மாது இதுமுன் பிறப்புமுதல்
பின்பிறப்பு முதலாய்ப் பேசென்றா ரீசரரும்

வேதவியாசர் முக்காலம் உரைத்தல்

அப்போது வேத வியாச ரகமகிழ்ந்து
செப்புகிறோ மென்று சிவனை மிகத்தொழுது
மூல முதலை முத்தி முகந்துகொண்டு
காலமே நின்ற கடவுளே தஞ்சமென்று
ஆதிமுத லந்தம் அடங்கல் மிகவுணர்ந்து
சோதி பதம்போற்றிச் சொல்லுவான் மாமுனியும்
மும்மூர்த்தி யான முதல்மூர்த்தி தோன்றியதும்
அம்மூர்த்தி தன்னில் ஆயிளையாள் தோன்றியதும்
சத்தியிலே நாதம் தான்தோன்றி வந்ததுவும்
வித்தியாய் நாதமதில் விந்துமிகத் தோன்றியதும்
விந்திலே விட்டிணுவும் விரைவாகத் தோன்றியதும்
அந்த முறைமுதலாய் அண்டபிண் டம்வரையும்
சொல்லி யுகமதுதான் தோன்றும்வகை கூறலுற்றான்
சல்லிக் கொடிய சண்டக் குறோணிமுதல்
நீசன் பிறப்புவரை நிகழ்த்தினான் மாமுனியும்
பாசனீ சன்வரைக்கும் பாருலக வாறதையும்
சொல்லி விரித்து சுத்தஏ ழாம்யுகந்தான்
நல்ல யுகமதுதான் நாடுவதுஞ் சொல்லிமிக
வல்ல யுகத்தில் வளரும் மனுவளமும்
எல்லாமே சொல்லி எற்றவை குண்டமுதல்
அந்நாட்டைச் சொல் ஒன்றுள் ளரசாளப்
பொன்னான நாரா யணர்ம கேந்திரனும்
நல்ல வைகுண்டம் நற்பிறவி யாய்வளர்ந்து

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments