Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 8791 - 8820 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 8791 – 8820 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 8791 – 8820 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பொங்கு கடல்துயின்ற புண்ணியரே நீர்கேளும்
என்னுடைய முத்துயரம் எல்லா மிகக்கழித்து
நன்னமுத மாக நன்மகவாய்ச் செய்தீரே
இன்னுங் கலியுகத்தில் இருக்கப் போச்சொல்லீரே
உன்னை யறியாமல் ஊன்கலியி லுள்ளோர்கள்
அன்னைபேர் தெரியாமல் அவனிப்பேர் சொல்லிச்சொல்லி
என்னை பழித்து ஏசுவானே நீசனெல்லாம்
அல்லாமல் முன்பெற்ற அவர்களுட பேரைச்சொல்லிப்
பொல்லாத நீசனெல்லாம் பேசி யடிப்பானே
சூத்திர விஞ்சை தொழிலை யறியாமல்
யூத்திர நீசனெல்லாம் ஒழுங்குதப்பி மாழ்வானே
நம்முடைய சாதி நம்மைமிகக் காணவந்தால்
செம்மைகெட்ட நீசன் சிதற அடிப்பானே
ஆனதால் நம்சாதி அகலநின்று வாடிடுமே
ஏனமென்ன சொல்லுகிறீர் என்னுடைய நாயகமே
முன்னென்னைப் பெற்ற மொய்குழலார் வம்மிசங்கள்
என்னேது வாலே இயல்புபெற வேணுமல்லோ
அல்லாமல் முன்னம் அணங்கொரு பெண்ணிணங்க
நல்லோர் மனசு நல்லணங்குக் கேகொடுத்து
மேலும் பதவி மிகக்கொடுக்க வேணுமல்லோ
மாலுஎன்னுடைய மனதில்குடியிருந்து
இப்படியே நல்ல இயல்பு பெறஅருளி
எப்படியு மென்னைவந்து ஏற்கவரும் நாளும்
எல்லாம் விவரமதாய் இயம்பி யனுப்புமென்றார்
பொல்லாத பேர்மாளப் போவதுவுஞ் சொல்லுமென்றார்
அந்த வுடனே ஆதிநா ராயணரும்
சிந்தை மகிழ்ந்து திருமகனை யாவிமிகக்
கட்டி யெடுத்துக் கமலமுகத் தோடணைத்துத்
திட்டித்த நாதன் சொல்வார் மகனு டனே

விருத்தம்

எந்தனின் தவத்தா லேக இகபர முனக்குள் ளாகித்

விளக்கவுரை :   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments